இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர். புதிய கேப்டன் நியமனம் – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

Sl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை மாதம் 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்றுள்ள நிலையில் தற்போது பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

dravid

- Advertisement -

அதே வேளையில் தற்போது இலங்கை அணியில் ஒரு முக்கிய மாற்றமாக அணியின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணியின் மூத்த வீரரான மேத்யூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் குஷால் பெரேராவுவும் சமீபத்தில் இங்கிலாந்து தொடரின்போது பிரச்சனையில் சிக்கி தடை செய்யப்பட்டுள்ளதால் இப்போது அந்த அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதன்படி 29 வயதான ஆல்ரவுண்டர் தசன் ஷனகா இலங்கை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் கேப்டனாக பொறுப்பேற்கும் பட்சத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஆறாவது கேப்டனாக இவர் மாற இருப்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியின் பல்வேறு கேப்டன் மாற்றங்கள் இருந்து வருகின்றன.

shanaka

அந்த அணியால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை சமீபத்தில் போர்வீரர்கள் விதியை மீறியதால் ஓராண்டு தடை செய்யப்பட்டுள்ள காரணம் காரணமாக இந்த கேப்டன் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement