2ஆவது குவாலிபயர் போட்டிக்கு முன்னர் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு வீரர் – விவரம் இதோ

RR
Advertisement

கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது கடந்த பல சீசன்களை காட்டிலும் இம்முறை சஞ்சு சாம்சன் தலைமையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணி தங்களது முதலாவது குவாலிபயர் போட்டியின்போது குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக தற்போது இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Ravichandran Ashwin RR

அதன்படி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் பங்கேற்கும் இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் ராஜஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வெளிநாட்டு ஆட்டக்காரர் ஒருவர் வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் டேரல் மிட்சல் ராஜஸ்தான் அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறி உள்ளார்.

daryl

அவர் வெளியேறினாலும் ராஜஸ்தான் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது. ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வெளிநாட்டு ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர், ஹெட்மையர், டிரென்ட் போல்ட் மற்றும் மெக்காய் ஆகியோரே விளையாட இருப்பதனால் அவரது இந்த வெளியேற்றம் ராஜஸ்தான் அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

- Advertisement -

இருப்பினும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இடம் பிடித்திருக்கும் டேரல் மிட்சல் முன்கூட்டியே பயிற்சி எடுப்பதற்காக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 2 ஆவது குவாலிபயர் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு போகப்போறது இந்த டீம் தான் – சஞ்சய் மஞ்சரேக்கர்

1) ஜாஸ் பட்லர், 2) யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சஞ்சு சாம்சன், 4) தேவ்தத் படிக்கல், 5) ஹெட்மயர், 6) ரியான் பராக், 7) அஷ்வின், 8) சாஹல், 9) ட்ரென்ட் போல்ட், 10) பிரசித் கிருஷ்ணா, 11) மெக்காய்

Advertisement