வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரை கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டிய நியூசி வீரர் – அதிரடி காட்டிய ஐ.சி.சி

Daryl
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டி20 போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றி இருந்தது. மூன்றாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஹாமில்டன் மைதானத்தில் தற்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

wivsnz

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 119 ரன்கள் அடித்து உதைக்க அதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 138 ரன்களுக்கு தனது மொத்த விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் செய்தது. நியூசிலாந்து சார்பாக முன்னணி வீரர் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேரில் மிட்செல் ஆபாசமாக வசை பாடி இருக்கிறார்.

daryl 1

இதனை பார்த்த ஐசிசி நடுவர் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தினார். அவ்வாறு வசை பாடியதை ஒப்புக் கொண்டார் வேகப்பந்து வீச்சாளர் டேரில் மிட்செல். இதன் காரணமாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு 2 சஸ்பென்ட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டிற்க்குள் மூன்று முறை தகுதி இழப்பு புள்ளியை பெற்றால் போட்டிகளில் அந்த குறிப்பிட்ட வீரரால் சில போட்டிகளில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

williamson

இதுபோன்ற வார்த்தை மோதல்கள் வீரர்களுக்குள் புதிது இல்லை என்றாலும் அவ்வாறு செய்வது தவறு அது மட்டுமின்றி ஆபாச வார்த்தைகளை திட்டுதல் மிகவும் மோசமான செயல் என்பதால் தற்போது இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஐசிசி தகுதிகள் புலிகளை அழித்து சில போட்டிகளில் தடை செய்யவும் விதிமுறைகளை வகுத்துள்ளது அந்த வகையில் தண்டிக்கப்பட வேண்டியவர் தான் என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement