இந்தியாவுக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் வென்ற இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள நியூஸிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 285 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்வது.
அதிகபட்சமாக கே.எல் ராகுல் சதமடித்து 112*, கேப்டன் கில் 56 ரன்கள் எடுத்த போதிலும் மற்றவர்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை. அடுத்ததாக சேசிங் செய்த நியூசிலாந்து 47.3 ஓவரிலேயே 286/3 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் சதமடித்து 131*, வில் எங் 87, கிளன் பிலிப்ஸ் 32* ரன்கள் எடுத்து 2017க்குப்பின் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து தோற்கடிக்க உதவினார்கள்.
ஆட்டநாயகன் மிட்சேல்:
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேரில் மிட்சேல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா சிறப்பாக பந்து வீசிய போதிலும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி வெற்றி கண்டதாக மிட்சேல் தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகிலேயே மிகவும் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான குல்தீப் யாதவை சூழ்நிலைக்கு தகுந்தார் போல் எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சில வருடங்களாக நாங்கள் இந்தியாவில் வெற்றி பெறவில்லை. அதனால் இந்த வெற்றி நன்றாக இருக்கின்றது. எங்களுடைய இளம் அணி உலகின் சிறந்த அணிக்கு எதிராக சவால் விடுவதைப் பார்ப்பது நன்றாக இருக்கின்றது. என்னுடைய நாட்டுக்காக எனது வேலையை செய்கிறேன். நியூசிலாந்துக்காக விளையாடுவதை விரும்பும் நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடத் தயாராக இருக்கின்றேன்”
சிறந்த வெற்றி:
“க்ளாஸ் வீரரான வில் எங்குடன் சேர்ந்து விளையாடுவதை விரும்பினேன். ஆட்டத்தின் ஆரம்பத்தில் அவர் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார். பின்னர் தமக்குள்ள ஆப்ஷன்களை பயன்படுத்தி ஸ்பின்னர்களையும் எதிர்கொண்டார். அவருடன் சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது மகிழ்ச்சியாக அமைந்தது. குல்தீப் உலகிலேயே சிறந்த பவுலர்களில் ஒருவர்”
இதையும் படிங்க: 2வது ஒன்டேவில் இந்தியா தோற்க இதான் காரணம்.. இந்த ரெண்டை செய்யலன்னா 300 கூட பத்தாது.. கில் வருத்தம்
“பந்தை இருபுறமும் சுழற்றக்கூடிய திறமைக் கொண்ட அவரிடம் சிறப்பான திறமைகள் இருக்கின்றன. எங்களைப் பொறுத்த வரை சூழ்நிலையைப் படித்து அதற்கு தகுந்தார் போல் மாற்றிக்கொள்வது முக்கியமாக இருந்தது. இந்தியாவின் பவுலிங் சமமாக இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நிறைய வெற்றிகளைக் கண்டுள்ள குல்தீப் அவர்களுக்கு மிகப்பெரிய பவுலர். எனவே அவர் மேலே நாங்கள் அழுத்தத்தை போட முயற்சிப்போம். இறுதியில் போராடி வென்றது மிகவும் திருப்தியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.



