டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கப்போவது இந்த அணிதான் – டேரன் சமி உறுதி

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Cup

- Advertisement -

அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இருமுறை டி20 உலகக் கோப்பை வெற்றி பெற்று கொடுத்த கேப்டன் டேரன் சம்மி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸ் அணியை பொருத்தமட்டில் அனைத்து வீரர்களும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

கடைசியாக நடைபெற்ற 4 உலக கோப்பை தொடர்களில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்படுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் அதுமட்டுமின்றி கெயில், ரசல், ஹோல்டர், எவின் லீவிஸ் போன்ற சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர்.

Lewis

இதன்காரணமாக நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த உலக கோப்பை தொடரை வெல்ல அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. அதேபோன்று இங்கிலாந்து அணியை பார்த்தாலும் மிகச் சிறந்த டி20 வீரர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் என்னை பொருத்தமட்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும் அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் டேரன் சம்மி தனது கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement