ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆர்.சி.பி அணி ஏன் தோற்று வெளியேறுகிறது என்பது குறித்து சரியான விளக்கத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான டேரன் சமி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதன்படி அவர் இட்ட பதிவில் பேட்ஸ்மேன்கள் ஒரு போட்டியை வென்று கொடுக்க முடியும். ஆனால் ஒரு அணியில் உள்ள பவுலர்கள் தான் அந்த தொடரை வென்று கொடுக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
My thoughts for RCB next season “ Batters win you games, Bowlers win you tournaments” unless that happens there will not be an #IPL trophy in the cabinet…
— Daren Sammy (@darensammy88) November 7, 2020
மேலும் அவர் குறிப்பிட்டுள்ள அந்த கருத்தில் சாகல் மட்டுமே தொடர்ந்து அந்த அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை குவிக்கும் பட்டியலில் இடம் பெறுகிறார். அவரை தவிர வேறு எந்த பபவுலரும் அந்த அணிக்கு சரியாக பந்து வீசுவது கிடையாது. எனவே பந்துவீச்சாளர்கள் சரியாக கிடைக்கும் வரை பெங்களூர் அணி தொடர்ந்து தோற்று கொண்டே தான் இருக்கும் என்றும் அதற்கான காரணத்தை சமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



