பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு கவுரவ குடியுரிமை அளித்த – பாக் அரசு

Sammy-2
- Advertisement -

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி தொடரின் பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பிறகு எந்த ஒரு நாட்டு அணிகளும் அங்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை மறுத்து வந்தனர்.

sammy 1

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடங்கப்பட்டு அதில் மேற்கிந்திய தீவுகள் வீரர் டேரன் சமி இணைந்து விளையாடினார். இதுவரை தொடர்ந்து ஐந்து சீசன்களாக விளையாடி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு லாகூரில் போட்டி நடந்தது. அதில் பங்கேற்ற சமி அங்கு விளையாட சம்மதம் தெரிவித்தார்.

அதன் பின்னர் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் அங்கு வர மறுத்து விட்ட நிலையில் சமி அனைத்து சீசன்களிலும் விளையாடினார். மேலும் பெஷாவர் அணிக்கு கேப்டனாக பங்கேற்ற இரண்டாவது ஆண்டு கோப்பையை வென்று கொடுத்தார். இதையடுத்து பெஷாவர் அணியின் உரிமையாளர் அந்நாட்டுக்கு அதிபருக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில் பாகிஸ்தான் கிரிக்கெட்க்கு சேவை செய்த காரணத்திற்காக சமிக்கு கௌரவ குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை வைத்திருந்தார்.

sammy

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் மத்தியில் சமி விரும்பத்தக்க நபராக மாறியுள்ளார். இதற்கு முன்னர் ஹைடனுக்கும், கிப்ஸ்க்கும் வெஸ்ட் இண்டீஸ் அரசு கௌரவ குடியுரிமை வழங்கி இருந்தது. அதன் பிறகு தற்போது பாகிஸ்தானில் சமிக்கு கௌரவ குடியுரிமை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement