- Advertisement -
உலக கிரிக்கெட்

சச்சின் சாதனையை ஜோ ரூட் ஈஸியா உடைச்சு.. அந்த ஆஸி ஜாம்பவான் பெயரை எடுப்பாரு.. டேரன் லேமன்

நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் அவருடைய சாதனைகளை உடைக்க வேகமாக துரத்தி வருகிறார். இதுவரை 41 சதங்கள் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கரை (51) முந்துவதற்கு மேற்கொண்டு 11 சதங்கள் தேவைப்படுகிறது.

அதே போல பேட்டிங்கில் இதுவரை 163 போட்டிகளில் 13937 ரன்களை குவித்துள்ள ரூட் 2வது அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். இவ்வளவு சாதனைகளை படைத்துள்ள அவர் சவாலான ஆஸ்திரேலியாவில் விளையாடிய 12 வருடங்களில் ஒரு முறை கூட சதமடித்ததில்லை. அதனால் ஆஸ்திரேலியாவில் சதமடிக்காத அவருடைய தரம் பற்றி ஒரு தரப்பினர் விமர்சித்து வந்தார்கள்.

- Advertisement -

சச்சினை ஈஸியா முந்துவாரு:

அந்த சூழ்நிலையில் 2025/26 ஆஷஸ் தொடரின் 2வது போட்டியில் சதமடித்த ஜோ ரூட் கடைசி போட்டியிலும் 160 ரன்கள் குவித்துள்ளார். அதனால் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் ஆஸ்திரேலியாவிலும் சதமடித்து தரத்தை நிரூபித்துள்ளார். இந்நிலையில் தங்களுடைய நாட்டில் சதமடித்த ஜோ ரூட்டை சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 35 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரூட் விரைவில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை எளிதாக உடைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியாக தமது கேரியரின் முடிவில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேன் போல ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன் என்ற பெயரை எடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி லேமன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

லேமன் நம்பிக்கை:

“ஒருமுறை ஆஸ்திரேலியாவில் சதத்தை அடித்து விட்டால் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பிராட்மேனுக்கு வெளியே ஜோ ரூட் கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். கண்டிப்பாக அவர் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார். அவர் சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் உடைப்பார். மற்றவர்களைக் காட்டிலும் அவர் அதிக சதங்கள் அடிப்பார்கள்”

இதையும் படிங்க: 1 ஃபோர் 10 சிக்ஸ்.. மழைக்கு முந்தி தெ.ஆ’வை அடித்து நொறுக்கிய சூர்யவன்சி.. இளம் இந்தியா வெற்றி

“அதற்கு நிறைய தேவைப்படலாம். ஆனால் அவர் நன்றாக ஃபிட்டாக இருக்கிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல சச்சின் டெண்டுல்கரை முந்துவதற்கு ஜோ ரூட்டுக்கு இன்னும் 2000க்கும் குறைவான ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் உடைப்பதற்கான பிரகாச வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -