நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான சூப்பர் 8 சுற்று போட்டியானது இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. அதன்படி மார்ச் 1-ஆம் தேதி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 52-வது போட்டியாக இந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டியானது நடைபெற உள்ளது.
வருண் சக்கரவர்த்திக்கு எதிராக திட்டம் உள்ளது : டேரன் சமி
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் இணைந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு இந்த போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளதால் ரசிகர்களுக்கும் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான டேரன் சமி இந்திய அணியை எச்சரிக்கும் வகையிலும் வருண் சக்கரவர்த்திக்கு எதிரான திட்டங்கள் குறித்தும் சில கருத்துக்களை பேசியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
கடந்த 2016 ஆம் ஆண்டு இதே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தான் நான் கேப்டனாக கோப்பையை வென்றேன். தற்போது இங்கு பயிற்சியாளராக வந்துள்ளேன். எனவே இங்கு நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும் என்று கேட்டால் எனக்கு தெரியாது? ஆனால் இந்த தொடரை நாங்கள் கைப்பற்ற வேண்டுமெனில் இந்திய அணியை வீழ்த்தியே ஆக வேண்டும். மேலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியை சமாளிக்க எங்களிடம் தெளிவான திட்டம் இருக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை வெளியேற்றம்.. பாகிஸ்தான் கேப்டனுக்கு ஏற்படப்போகும் ஏமாற்றம் – விவரம் இதோ
அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கலாம் அதை மதிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் எதிராக எப்படி விளையாட வேண்டும்? என்று தனித்தனியான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. நிச்சயம் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என டேரன் சமி கூறியது குறிப்பிடத்தக்கது.



