ஆசியக்கோப்பை : ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக அவர்தான் களமிறங்க வேண்டும் – டேனிஷ் கனேரியா விருப்பம்

Danish-Kaneria-and-Rohit
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றிய பிறகு அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 11-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

Asia-Cup

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் 27-ஆம் தேதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக எந்த இருவர் களமிறங்க வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Sky-1

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா துவக்க வீரராகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் தொடக்க வீரராக நீடிக்க வேண்டும். அதோடு சமீப காலமாகவே காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த ராகுல் தற்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் அவர் பின்வரிசையில் விளையாடலாம்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அதோடு நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் துவக்க வீரராக களமிறங்கியதால் ரோகித் சர்மாவுடன் சூரியகுமார் யாதவே துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று கனேரியா விருப்பம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : திறமையால் ஆச்சர்யமாக திகழும் கிங் விராட் கோலியையே ஆச்சர்யப்படுத்திய 4 கிரிக்கெட் வீரர்கள் – வித்யாசமான பதிவு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் ஏற்கனவே அணியின் கீழ் வரிசையிலும் விளையாடி பழகியவர் என்பதனால் எந்த இடத்திலும் அவரால் பேட்டிங் செய்ய இயலும். எனவே ரோகித் சர்மாவுடன் சூரியகுமார் யாதவே துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement