இவர் தான் பாகிஸ்தானின் புதிய தேர்வுக்குழு தலைவரா? முன்னாள் நட்சத்திர பாக் வீரரை வெறித்தமான கலாய்த்த டேனிஷ் கனேரியா

Kaneria
Advertisement

இங்கிலாந்துக்கு எதிராக 17 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 என்ற கணக்கில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இலங்கையிடம் பைனலில் தோற்ற அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை பைனலிலும் இங்கிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்டது.

PAK Ramiz Raja

அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரிலும் 4 – 3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி இந்த வருடம் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் படுதோல்வியை சந்தித்தது. அதனால் எதற்குமே சரிப்பட்டு வர மாட்டீங்க என்று உலக அளவில் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளான அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர்.

- Advertisement -

புதிய தேர்வுக்குழு தலைவர்:
குறிப்பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தார் ரோட் போல பிட்ச் இருந்ததற்காக ஐசிசி தண்டனை கொடுத்த போது அடுத்த தொடருக்குள் தரமான பிட்ச் உருவாக்கப்படும் என்று வாயில் மட்டும் பேசியதை செயலில் காட்ட தவறிய ரமீஷ் ராஜா 2023 ஆசிய கோப்பை விவாகரத்தில் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவரது தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த காரணத்தால் பாகிஸ்தான் வாரிய தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக முன்னாள் தலைவர் நஜாம் செதி மீண்டும் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

Afridi

அவர் பொறுப்பேற்றதும் நிறைய மாற்றங்கள் நிகந்து வரும் பாகிஸ்தான் வாரியத்தில் ஏற்கனவே இருந்த தேர்வுக்குழு தலைவரும் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் நட்சத்திரம் ஜாம்பவான் வீரர் சாகித் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரலாற்றின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராகவும் பாகிஸ்தான் ரசிகர்களால் மிகவும் மதிக்கப்பட்டு கொண்டாடப்படும் நட்சத்திரங்களில் ஒருவராகவும் கருதப்படும் அவர் புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றது அந்நாட்டவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

மேலும் புதிதாக பொறுப்பேற்ற அவர் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று துவங்கிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தார். அதில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு கேப்டனாகவும் சொதப்பிய பாபர் அசாமுக்கு ஆதரவு கொடுத்து மீண்டும் கேப்டனாக தேர்வு செய்த அவர் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அஹமதை மீண்டும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார். மேலும் பாபர் அசாமுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்றும் சாகித் அப்ரிடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இவரெல்லாம் தலைமை தேர்வுக்குழு தலைவரா என்ற வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் பந்தை வாயில் கடித்து சேதப்படுத்திய சாகித் அப்ரிடியின் புகைப்படத்தை பதிவிட்டு முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தனது டுவிட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சமயத்தில் பந்தை சேதப்படுத்தியதற்காக 2 போட்டிகளில் தடை பெற்ற சாகித் அப்ரிடி தம்முடைய காலத்தில் சூதாட்ட சர்ச்சையில் தமது பெயரை கோர்த்து விட்டு தப்பியதாக டேனிஷ் கனேரியா சமீப காலங்களில் விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்ககேட்ச் பிடிச்சிருந்தா தோத்துருப்பிங்க – ட்விட்டரில் வம்பிழுத்த இலங்கை நிரூபருக்கு அஷ்வின் கொடுத்த சவுக்கடி பதில் இதோ

அத்துடன் பாகிஸ்தான் அணியில் தாம் மட்டும் ஒரு ஹிந்து என்பதால் அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த சாகித் அப்ரிடி தம்மை மிகவும் மட்டமாக நடத்தியதாகவும் அவர் தெரிவித்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அப்படி கிரிக்கெட் வீரராகவும் கேப்டனாகவும் சுமாராக செயல்பட்ட ஒருவர் பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்ற வகையில் அவர் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக கலாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement