இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட இதுவே காரணம் – டேனிஷ் கனேரியா பேட்டி

Kaneria
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் 15 பேர் கொண்ட அணியாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sanju Samson 1

- Advertisement -

ஆனால் அவரை கழட்டிவிட்ட இந்திய அணியின் நிர்வாகம் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை மட்டுமே தேர்வு செய்தது. இந்நிலையில் டி20 உலக கோப்பை அணியில் சாம்சன் வாய்ப்பினை பெறாததற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்வேளையில் தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா தனது கருத்தினை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Samson

அதில் டி20 உலகக் கோப்பை அணியில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய முடியாததால் ஏற்பட்ட அழுத்தத்தினாலேயே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரை இந்தியா ஏ அணியின் கேப்டனாக அவரை மாற்றியுள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சஞ்சு சாம்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் ஆஸ்திரேலியா மைதானங்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் பேட்டிங் செய்யும் விதம் ஆஸ்திரேலியாவில் நிச்சயம் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அவரை இந்திய அணியில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே தற்போது இந்திய ஏ அணிக்கான கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய தொடருக்கான பிட்சை நான் சொல்றமாதிரி ரெடி பண்ணுங்க – வாசிம் ஜாபர் வேண்டுகோள்

அதேபோன்று மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எந்த வகையான தேசிய அணிக்கும் கேப்டனாக செயல்பட்டாலும் அது பெருமைதான். அந்த வகையில் சஞ்சு சாம்சனுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. அவர் இந்திய ஏ அணியின் கேப்டனாக இந்த தொடரை வென்று கொடுத்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement