இலங்கை அணிக்கெதிரான மோசாமான தோல்விக்கு தவான் செய்த இந்த தவறே காரணம் – டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி அபாரமாக விளையாடி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் இழந்தது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இலங்கை அணி அபாரமாக வீழ்த்தியிருந்த நிலையில் அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Dhawan

- Advertisement -

ஆனால் அப்போது இந்திய அணியின் முன்னணி வீரரான க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவரோடு சேர்ந்து அவருடன் நெருக்கத்தில் இருந்து 8 வீரர்கள் என ஒன்பது வீரர்கள் கடைசி இரு போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர் களுடன் விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதிலும் குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக அமைந்தது. தவான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஒட்டுமொத்தமாக சரிந்தது. இந்த தோல்வி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், நிபுணர்களும் ஒவ்வொரு வீரரை குற்றம்சாட்டி வர தற்போது இந்த டி20 தொடரை இழந்ததற்கு இந்திய அணியின் கேப்டன் தவான் தான் காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

Varun

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் ஆறு பவுலர்கள் இடம் பெற்றுள்ள போது முதலில் பேட்டிங் செய்து எதற்காக இப்படி விளையாட வேண்டும். முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்திருந்தால் 6 பவுலர்களையும் பயன்படுத்தி இலங்கை அணியை எளிதாக சுருட்டி இருக்கலாம் ஆனால் அதை விடுத்து பேட்டிங்கை தேர்வு செய்து இப்படி போட்டியையும் மொத்தமாக தவற விட்டுவிட்டார்.

மேலும் அவரை தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமான ஷாட்டுகள் அடித்து ஆட்டமிழந்தனர். அவர்களது விக்கெட்டுகளை இலங்கை வீரர்கள் மிக எளிதாக வீழ்த்தினர் என்று கூறுவேன். மொத்தத்தில் தவான் செய்த இந்த தவறும், இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த சொதப்பலும் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டன என கனேரியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement