இதுக்கு பேர் தான் பகல் கொள்ளையா? பாகிஸ்தான் வாரியத்தை ஆதாரத்துடன் விளாசிய கனேரியா.. காரணம் என்ன?

Danish Kaneria.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வரலாற்றில் தொடர்ந்து 28வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் வெல்ல முடியாமல் மண்ணை கவ்வியது.

குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விகளுக்கு நட்சத்திர வீரர் பாபர் அசாம் பொறுப்பேற்று தம்முடைய கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து புதிய கேப்டனாக ஷான் மசூட் அறிவிக்கப்பட்ட போதிலும் செயல்பாடுகளில் எந்த மாற்றங்களையும் சந்திக்காத பாகிஸ்தான் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 15வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பகல் கொள்ளை:
இந்த சூழ்நிலையில் 2வது போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த தங்களுடைய டாப் பவுலர்களின் பட்டியலை பாகிஸ்தான் வாரியம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் வாசிம் அக்ரம் 46, இம்ரான் கான் 45, இக்பால் காசிம் 21, சர்ப்ராஸ் நவாஸ் 50, முஷ்டாக் அஹ்மத் 22, சக்லைன் முஸ்தக் 14, முகமது ஆசிப் 13 விக்கெட்களை எடுத்து டாப் இடங்களை பிடித்துள்ளார்கள்.

இருப்பினும் அந்த பட்டியலை பார்த்த முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகளில் 24 விக்கெட்கள் எடுத்தும் தம்முடைய பெயர் இல்லை என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சமீப காலங்களாகவே பாகிஸ்தான் வாரியத்துக்கு எதிராக நிறைய அம்சங்களில் குரல் கொடுத்து வருவதால் தம்மை பழிவாங்குவதற்காக இப்படி பகல் கொள்ளையை போல தம்முடைய பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் டேனிஷ் கனேரியா ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“பாகிஸ்தான் வாரியத்தின் துணிச்சலை பாருங்கள் நான் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் இந்த பட்டியலில் என்னுடைய பெயரை நீக்கி விட்டார்கள். இது எனக்கு எதிரான சுத்த பாகுபாட்டுக்கான உதாரணமாகும்” என்று கூறியுள்ளார். இருப்பினும் அதைப் பார்க்கும் ரசிகர்கள் இந்த பட்டியல் அதிக விக்கெட்களை அடிப்படையாக வைக்காமல் அதிக சராசரியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாலயே உங்களுடைய பெயர் இல்லை என்று பதிலளித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ தக்க வைக்க முக்கிய பிளான்.. வெ.இ ஜாம்பவானை வளைத்து போட்ட இங்கிலாந்து

அப்படி ரசிகர்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது 24 விக்கெட்களை 40.58 என்ற சராசரியில் எடுத்துள்ள காரணத்தாலேயே அந்த பட்டியலில் டேனிஷ் கனேரியாவின் பெயர் இடம் பெறாமல் போயிருக்கலாம். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் 2வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement