நான் ஹிந்து என்ற காரணத்தினால் எனக்கு என்னவெல்லாம் நடந்தது தெரியுமா ? – புலம்பிய முன்னாள் பாக் வீரர்

Kaneria
- Advertisement -

டேனிஷ் கனேரியா பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 39 வயதாகிறது. இவர் பாகிஸ்தான் அணிக்காக பத்து வருடங்கள் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
61 டெஸ்ட் போட்டிகளிலும், 18 ஒருநாள் போட்டியிளும் ஆடியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து 206 உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

Kaneria 2

- Advertisement -

சுழற்பந்து வீச்சாளரான இவர் பாகிஸ்தான் அணிக்காக இரண்டு விதமான போட்டிகளிலும் சேர்த்து 276 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் தான் ஒரு இந்து என்பதால் பாகிஸ்தான் அணியில் பாரபட்சம் காட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்..

நான் பாகிஸ்தான் நாட்டிற்காக அந்த நாட்டின் பிரதிநிதியாக என் ஆசை தீர ஆடிவிட்டேன். இதற்காக பெருமிதம் கொள்கிறேன். அதேபோல் முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் ஒரு இந்துவாக இருந்து கொண்டு இந்த அளவிற்கு சாதிப்பது பெருமை அளிக்கிறது.மதத்தை வைத்து நான் எப்போதும் அரசியல் செய்தது கிடையாது.

Kaneria

ஆனால் அதற்கு நேர் எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னிடம் இரட்டை வேடம் போட்டது. அணியின் முஸ்லிம் வீரர்களுக்கு ஒருவிதமான வசதியும் எனக்கு ஒரு விதமான வசதியும் கொடுக்கப்பட்டது. அதனை நான் வெளிப்படுத்தி தற்போது முயற்சி செய்து வருகிறேன்.

Kaneria 1

நான் இந்த மதத்தை வைத்து எனக்கு சாதகமாக பெற்றதை சொல்லவில்லை ஆனால் உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா. சமீப காலமாகவே பாகிஸ்தான் வீரர்களும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement