உலகின் தலைசிறந்த கேப்டன் கோலி கிடையாது. இவர்தான் பெஸ்ட் – டேனிஷ் கனேரியா ஓபன்டாக்

Kaneria
- Advertisement -

உலகளவில் தற்போது கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் என்று விராட் கோலி புகழப்படுகிறார். இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக அணியை வழிநடத்தி வரும் விராட் கோலி இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டியில் அதிக போட்டிகளில் வெற்றிபெற்று கொடுத்த கேப்டன் என்ற பெயரையும் எடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி வரை இந்திய அணியை கொண்டு சென்ற அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று இறுதியில் தோல்வியை சந்தித்தார்.

kohli 1

- Advertisement -

விராட் கோலி ஒரு சிறப்பான கேப்டனாக பல வெற்றிகளை குவித்த நிலையில் இதுவரை ஐசிசி கோப்பையை அவரால் வெல்ல முடியவில்லை என்ற பேச்சு மட்டுமே அவருக்கு எதிராக உள்ளதே தவிர மற்றபடி அவர் சிறந்த கேப்டன் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் – 2021ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 5 வருடங்கள் தொடர்ந்து இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் வைத்திருக்கும் கோலி உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஒரு குறையை மட்டுமே வைத்துள்ளார்.

இதனால் விராட் கோலியை தான் அனைவரும் உலகின் பெஸ்ட் கேப்டன் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விராட் கோலியை விட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். அவர் கூறியது போலவே வில்லியம்சன் மிகச் சிறந்த கேப்டன் என்பதில் யாருக்கும் மறுப்பு இல்லை.

Williamson

ஏனெனில் நியூசிலாந்து அணியை சரியாக கட்டமைத்து சிறப்பாக வழிநடத்திய அவர் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை கொண்டுசென்று நூலிழையில் கோப்பையைத் தவற விட்டார். ஆனால் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று அந்த அணிக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியும் கொடுத்தார்.

Williamson

வெற்றி தோல்விகள் வரும்போது எப்போதும் தனது குணத்தை மாற்றாமல் சிரித்தபடியே இருக்கும் வில்லியம்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நிச்சயம் வில்லியம்சன் மிகச் சிறந்த கேப்டன் என்றே கூறலாம். டேனிஷ் கனேரியா தற்போது உலகின் சிறந்த கேப்டனாக வில்லியம்சனை கூறியுள்ளது சரியான கருத்து என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement