ஹிந்துவாக நான் இருந்ததால் ஏகப்பட்ட கஷ்டங்கள் பாக் அணியில் இருந்தது – மனம்திறந்த கனேரியா

Kaneria
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா என்பவர் ஹிந்து மதத்தை கடைபிடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பாகிஸ்தான் வீரர். அவர் பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2000ஆவது ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

Kaneria 2

- Advertisement -

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோயப் அக்தர் கனேரியா குறித்து இணையத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டேனிஷ் கனேரியா இந்துவாக இருந்ததால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சக வீரர்கள் அவரிடம் பழக பாகுபாடு காட்டினர்.

மேலும் அனைவரும் உணவு அருந்த இருக்கும் ஒரு டேபிளில் உணவு எடுக்க அவர் வரும்போது அவரை தடுத்தனர். அவர்கள் டேனிஷ் கனேரியாவுடன் ஒன்றாக உணவு கூட உண்ண மாட்டார்கள் என்றும் அக்தர் ஒரு அதிர்ச்சித் தகவலை கூறினார் .மேலும் டேனிஷ் கனேரியா எவ்வளவுதான் சிறப்பான ஆட்டத்தை அந்த போட்டியில் வெளிப்படுத்தி இருந்தாலும் அவருக்கு பாராட்டும் அங்கீகாரமும் அந்த போட்டியில் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Kaneria 1

இது குறித்து முதன் முறையாக பேசிய டேனிஷ் கனேரியா கூறுகையில் : நான் இந்துவாக இருந்ததால் என்னுடன் சக வீரர்கள் உணவு அருந்த மாட்டார்கள் அது உண்மைதான். மேலும் அக்தர் கூறிய அனைத்துமே உண்மைதான். நான் ஒரு இந்து என்ற காரணத்தினாலேயே என்னுடன் சில வீரர்கள் பேசவே மாட்டார்கள். மேலும் அணிக்குள் எனக்கு பாகுபாடு இருந்தது அதனால் நிறைய கஷ்டப்பட்டேன். அந்த வீரர்கள் குறித்த பட்டியலை முன்பு வெளிப்படுத்த எனக்கு தைரியம் இல்லை ஆனால் தற்போது அதை வெளிப்படுத்த தைரியம் இருக்கிறது என்றும் டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement