ரஷீத் கான் உடன் திருமணமா..! ரசிகர்களின் கேள்விக்கு டேனியல் வட் சொன்ன நெத்தியடி பதில்..! – என்ன தெரியுமா..?

daniell
Advertisement

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி மூலம் இந்திய ரசிகர்களிடையே ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் பெரும் பிரபலமடிந்தார். இந்நிலையில் ரஷித் கானை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்ற ட்விட்டர் வாசியின் கேள்விக்கு இங்கிலாந்து மகளீர் அணியின் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வ்யாட் வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

ரஷீத் கான் தற்போது இங்கிலாந்து கவுண்டி தொடர்களில் சுசக்ஸ் அணியில் விளையாடி வருகிறார். சமீபத்தில் சுசக்ஸ் அணி மற்றும் இசக்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் ரஷீத் கான் 4 ஒவர்களை வீசி 25 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கை பற்றினார். மேலும்,இசக்ஸ் அணியின் சிறந்த வீரர்களான வருண் சோப்ரா மற்றும் ரவி பூபாரா ஆகியோரின் விக்கெட்டுகளையும் கை பற்றினார்.

- Advertisement -

ரஷீத் கானின் விக்கெட் எடுத்த வீடியோ பதிவை சுசக்ஸ் அணியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியது. அந்த வீடியோ பதிவை கண்ட இங்கிலாந்து மகளீர் அணியின் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வ்யாட் ரஷீத் கானின் பந்து வீச்சை பாராட்டினார். அவர் பதிவிட்ட கமன்ட்டின் கீழ் ட்விட்டர் வாசி ஒருவர் ” எப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் ” என்று கேட்டுள்ளார். இதற்கு டேனியல் வ்யாட் சிரித்தபடி உள்ள ஒரு ஸ்மைலி மூலம் பதிலளித்துள்ளார்.

ஆப்கனிஸ்தான் வீரரான ரஷீத் கான் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வந்தார் இந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற பந்துவீச்சாளர் என்ற படத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement