கேப்டனாக இருப்பதால் இஷான் கிஷனுக்கு இந்த 2 கூடுதல் சாதகமும் இருக்கு – டேனியல் வெட்டோரி பேட்டி

Vettori and Ishan Kishan
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது சீசனானது கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடயிருந்த பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இடம்பெற முடியாமல் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பேட் கம்மின்சும் காயம் காரணமாக இந்த 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இஷான் கிஷன் கேப்டன்சி குறித்து பேசிய : டேனியல் வெட்டோரி

அதோடு அவர் இந்த தொடரின் இரண்டாம் பாதியில் அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டிருந்தது. இப்படி பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த 2026 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாடாததால் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் அணியை வழி நடத்துவார் என ஏற்கனவே ஹைதராபாத் அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த வகையில் இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்.சி.பி அணிக்கு எதிராக விளையாடி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதற்கடுத்து ஏப்ரல் 02-ஆம் தேதியான இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இஷான் கிஷன் குறித்து சில கருத்துக்களை அந்த அணியின் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் வெளியில் இருந்தாலும் தற்போதைய கேப்டனான இஷான் கிஷனுடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இஷான் கிஷனை பொறுத்தவரை அவர் கேப்டனாக மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக அணியை வழி நடத்தி கோப்பையை வென்று கொடுத்த அவர் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே இந்த தொடரில் அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியுள்ளோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் அறிமுகமாக இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி.. பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு – வெளியான தகவல்

கேப்டனாக இருப்பதனால் அவருடைய விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டுமே உயர்தரமாக இருந்து வருவதை பார்க்க முடிகிறது. கீப்பராக இருப்பதால் அவர் நல்ல முடிவுகளை எடுக்கிறார். அதிரடி பேட்ஸ்மனாக இருப்பதால் ரன்களையும் குவிக்கிறார். இப்படி கேப்டன் பொறுப்பால் இந்த இரண்டுமே அவருக்கு சாதகமாக தான் இருக்கிறது என இஷான் கிஷனை பாராட்டி டேனியல் வெட்டோரி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement