ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.
இந்த வருடம் சில அதிரடி ஆட்டக்காரர்களான கெயில், யுவராஜ் போன்றோரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்ச்சியாளர் டேனியல் வெட்டோரி “கிறிஸ் கெயிலை அணியில் இருந்து அனுப்பியது துரதிர்ஷ்டவசமான ஒன்று. ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெயில் அதிரடியாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார். அவருக்கு குட்பை சொல்வதென்பது மிக மிக கடினமான ஒன்று என்றார்.
விராட்கோலி இந்தமுறையும் பெங்களூரு அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளார். இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடுமையாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.