ராயல் சாலஞ்சர்ஸ் அணி வீரர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார் பயிற்சியாளர் வெட்டோரி – காரணம் இதுதான் !

இந்த ஐபிஎல் சீசனில் மற்ற அணிகளை விட வலுவான பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது பெங்களூரு அணி தான். இருப்பினும் அந்த அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாததால் மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்னறனர்.அதுவும் கடைசி ஓவர்களில் எதிரணியினரின் ரன்ரேட்டை கட்டுப்படுத்திட முடியாமல் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தவித்துவருகின்றனர்.

vettori

பெங்களூரு அணியின் தொடர் தோல்விகளால் அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி அதிருப்தி அடைந்துள்ளார்.தொடர்ந்து மோசமாக பந்துவீசி வரும் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவர்களில் 88 ரன்களை விட்டுக்கொடுத்தது.அந்த போட்டியில் 20ஓவர்களின் முடிவில் 217 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

- Advertisement -

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போதும் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்களை வழங்கியது. இந்த போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 213 ரன்களை குவித்தது.பெங்களூரு அணியின் இந்த மோசமான பந்துவீச்சு குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி “பெங்களூரு அணியின் இறுதி ஓவர்கள் பந்துவீச்சு என்னை வெறுப்படைய வைக்கின்றது.

yadhav

பெரிய இலக்குகளை நோக்கி விளையாடிடும் போது அணிக்கு அழுத்தம் இருக்கும் தான். மும்பைக்கு எதிரான போட்டியில் விராட்கோலி சிறப்பாக விளையாடினாலுமே கூட, அவருக்கு உறுதுணையாக நின்று விளையாடிட ஒருவரும் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது.கடைசி இரண்டு போட்டிகளிலும் இறுதி 5ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது தான் கடும் அதிருப்தியை அளிக்கின்றது” என்றார்.

- Advertisement -
Advertisement