இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பை இந்த அணிதான் கைப்பற்றும் – அதிரடி ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் பேட்டி

Christian-3
- Advertisement -

உலக அளவில் சர்வதேச டி20 தொடரில் மிக அதிகமாக விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேனியல் கிரிஸ்டியன். இதுவரை ஒன்பது வெவ்வேறு டி20 தொடர்களை வீரராக வென்றுள்ளார். அவரை ஆர்சிபி அணி இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 4.8 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சிகள் கலந்து கொண்டுள்ள டேனியல் கிறிஸ்டியன் ஆர்சிபி இந்த ஆண்டு நிச்சயமாக ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

christian

- Advertisement -

ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களில் இதுவரை கோப்பையை கைப்பற்றா அணிகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2009,2011,2016 என மூன்று வருடங்கள் இறுதி வரை சென்று டைட்டில் பட்டத்தை தவற விட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய டேனியல் கிரிஸ்டியன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு நிச்சயமாக கோப்பையை கைப்பற்றும் என்று கூறியுள்ளார். விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்கள் இருக்க இந்த ஆண்டு நிச்சயமாக ஆர்சிபி அணி அனைத்து அணிகளையும் எளிதாக வென்று விடும்.மேலும் பல இளம் வீரர்கள் இருக்கையில் நிச்சயம் இந்த ஆண்டு கோப்பை ஆர்சிபி அணிக்கேஎன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

christian 1

ஒரு ஆல்-ரவுண்டராக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பயிற்சி எடுத்துக் கொண்டு வருவதாக கூறிய கிறிஸ்டின், டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடும் அளவுக்கு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் பந்துவீச்சில் வெரைட்டியான லைனில் பந்துவீசி வருவதாகவும் கூறியுள்ளார்.

christian 2

ஐபிஎல் தொடரி டேனியல் கிரிஸ்டியன் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 446 ரன்களை குவித்துள்ளார், அவரது ஸ்ட்ரைக் ரேட் 119.2 ஆகும். மேலும் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவரது எக்கானமி 7.94 ஆகும்.

Advertisement