ரசித் கான் கிடையாது.. அந்த ஆப்கானிஸ்தான் பவுலர் ஆப்பு வைக்கலாம்.. விராட் – ரோஹித்தை எச்சரித்த ஸ்டைன்

Dale Styen 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் சூப்பர் 8 போட்டி ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. அதில் ஆப்கானிஸ்தானை விட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகவும் வலுவானதாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டில் இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.

எனவே இப்போட்டியிலும் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இந்தியா வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதே உலகக் கோப்பையில் நியூசிலாந்தை தோற்கடித்து வெளியேற்றிய ஆப்கானிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தியது. எனவே இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எச்சரித்த ஸ்டைன்:
குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ரசித் கான் உலகின் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னராக கருதப்படுகிறார். எனவே இப்போட்டியில் அவர் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ரசித் கானை விட ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி இந்தியாவின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு புதிய பந்தில் சவாலை கொடுப்பார் என்று ஜாம்பவான் டேல் ஸ்டைன் எச்சரித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “எச்சரிக்கையுடன் இருங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. அவரால் உங்களுடைய ஆப்புகளை தட்டி தூக்க முடியும். இந்திய அணியின் பார்வையில் ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய வீரராக இருப்பார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் கட்டுக்கோப்புடன் செயல்படுகிறார்”

- Advertisement -

“சூரியகுமார் யாதவ் இந்தப் போட்டியில் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்ய வருவார். இந்திய அணியின் பார்வையில் அவரையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அதாவது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய வலது கை பேட்ஸ்மேன்கள் ட்ரெண்ட் போல்ட், முகமது அமீர் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் தடுமாறியுள்ளனர்.

இதையும் படிங்க: எங்களை விட ஆப்கானிஸ்தான் ரொம்ப டேஞ்சரான டீம்.. இந்தியா அந்த தப்பை செய்யாது.. ராகுல் டிராவிட் பேட்டி

அது போன்ற சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பரூக்கி இத்தொடரில் 4 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 5.58 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இப்போட்டியில் புதிய பந்தை ஸ்விங் செய்து அவர் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு சவாலை கொடுக்கக்கூடும் என்று ஸ்டைன் கூறியுள்ளார். அதே போல பும்ரா ஆப்கானிஸ்தானுக்கு சவாலை கொடுப்பார் என்றும் ஸ்டைன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement