டேவிட் வார்னர் நீக்கத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான் – புது குண்டை தூக்கி போட்ட டேல் ஸ்டெயின்

Steyn
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் தலைமை பொறுப்பில் இருந்து கீழே இறக்கி உள்ளது. அவருக்கு பதிலாக இனி இந்த தொடர் முழுவதும் கேன் வில்லியம்சன் களமிறங்கப் போகிறார் என்றும் அறிக்கை வெளியிட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் விளையாடும் பட்டியலிலும் இடம் பெறவில்லை. இது அனைத்து ரசிகர்களையும் மிகப்பெரிய ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. டேவிட் வார்னர் இடம் பெறுவதற்கு உரிய காரணத்தை ஐதராபாத் அணியின் இயக்குனர் டாம் மூடி விளக்கம் அளித்து இருந்தாலும், இதுதான் முக்கிய காரணம் என்று தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் அண்மையில் கூறியுள்ளார்.

Warner

- Advertisement -

இந்நிலையில் இது சம்பந்தமாக கூறியுள்ள ஸ்டெயின், வார்னர் இந்தாண்டு நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை. மேலும் தலைமைதான் போதிலும் ஒரு சில விஷயங்கள் அவர் தவறாக செய்துள்ளார். இந்த அடிப்படையில் அவருடைய தலைமைப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பை கூட அவருக்கு வழங்கப்படவில்லை.

இதற்கு முக்கிய காரணமாக எனக்குத் தெரிவது, இந்திய வீரர் மனிஷ் பாண்டேவை அவர் ஓரங்கட்டி இருக்கிறார். அது ஹைதராபாத் அணி நிர்வாகத்தை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அதன் காரணமாகவே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது சம்பந்தமாக முழுமையாக நாம் எதையும் அதிகாரபூர்வமாக கூறி விட முடியாது.

கொரோனா காரணமாக பாதுகாப்பு வளையத்திற்குள் அந்த அணி தற்போது இருக்கிறது. எனவே அந்த அணியில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் மற்றும் மற்ற விஷயங்களைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. வெளிப்படையாக சிந்திக்கும் பொழுது இது தான் காரணம் என எனக்குத் தெரிகிறது என்று ஸ்டெயின் கூறியுள்ளார்.

warner

இறுதியில் டேல் ஸ்டெயின் ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் 50 அரை சதங்கள் அடிப்பது என்பது மிகப் பெரிய விஷயம். ஆனால் வார்னர் ஹைதராபாத் அணிக்காக நிறைய அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் அந்த அணிக்காக 4 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். நான்கு முறை ப்ளே ஆப் சுற்றுக்கு அந்த அணியை அழைத்துச் சென்று ஒரு முறை கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு வீரரை ஹைதராபாத் அணி நிர்வாகம் இப்படி நடத்துவது மிகவும் தவறு என டேல் ஸ்டெயின் ஹைதராபாத் நிர்வாகத்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement