இந்திய வீரரான இவர் அடிச்ச சிக்ஸை என்னால எப்போவுமே மறக்க முடியாது – டேல் ஸ்டெயின் ஓபன்டாக்

Steyn
- Advertisement -

உலகின் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னனி வீரராகவும் திகழ்ந்த டேல் ஸ்டெயின், சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருக்கும் ஒரு நபர் ஆவார். தற்போது தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவரிடம், எந்த பேட்ஸ்மேன் மற்றும் அவர் அடித்த சிக்ஸை இப்போதும் நீங்கள் ஞாபகப்படுத்தினால், உங்களது மனதிற்கு குளிர்ச்சியைத் தருகிறது? என்ற கேள்வியைக் கேட்டிருந்தது. அந்த கேள்விக்கு உடனடியாக பதிலளித்த டேல் ஸ்டெயின், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் அடித்த சிக்ஸரைக் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், ஸ்ரீசாந்த் அடித்த சிக்ஸரை நினைவுகூர்ந்த டேல் ஸ்டெயின்,

steyn 1

- Advertisement -

தென் ஆப்ரிக்க வேகப் பந்து வீச்சாளரான ஆன்ட்ரே நெல் ஓவரில்,லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்த ஸ்ரீசாந்த், அதனை கொண்டாடும் விதமாக மைதானத்திலேயே பேட்டை சுழற்றினார் என்று கூறியிருக்கிறார். டேல் ஸ்டெயின் விளையாடிய காலத்தில் எத்தனையோ ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம்விட்டு விட்டு ஸ்ரீசாந்த் அடித்த அந்த சிக்ஸை மட்டும் அவர் நினவுகூற காரணம் என்ன?

2006ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத் தொடருக்கு முன்பாக இந்தியர்கள் யாருக்கும் இதயமே இல்லை என்ற கருத்தைக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் தென் ஆப்ரிக்காவின் வேகப் பந்து வீச்சாளரான ஆன்ட்ரே நெல். அப்போது இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஆக்ரோஷமான வீரர் என்றால் அது ஸ்ரீசாந்த மட்டுமே. ஆன்ட்ரே நெல்லின் ஓவரில் சிக்ஸ் அடித்த ஸ்ரீசாந்த், அவரை வெறுப்பேற்றுவதற்கு என்றே பேட்டை சுழற்றியதோடு மட்டுமல்லாமல் மைதானத்திலேயே சிறிது நேரம் நடனமும் ஆடி, ஆண்ட்ரே நெல் கூறிய கருத்திற்கு பதிலடி தந்தார்.

ஸ்ரீசாந்தின் இந்த செயலைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டனர். அந்த சிரிப்பொலி அடங்கவே சில நிமிடங்கள் ஆனது. இதனால்தான் டேல் ஸ்டெயின், ஸ்ரீசாந்தின் அந்த சிக்ஸரை மட்டும் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார்.

Sreesanth

அந்தப் போட்டியில் மிக அற்புதமாக பந்து வீசிய ஸ்ரீசாந்த், முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார் என்பதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியையும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 15 வருடங்கள் கழித்தும் அந்த தருணத்தை நினைவுகூர்ந்த டேல் ஸ்டெயினின் அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement