கொரோனா வந்தாலும் சரி. என்னை இவருடன் வைத்து தனிமைப்படுத்துங்கள் – ஸ்டெயின் வேண்டுகோள்

Steyn
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடர் கடந்த 12 ஆம் தேதி தர்மசாலா நகரில் துவங்கியது. அந்த போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீதமுள்ள 2 போட்டிகளும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Rsa-3

- Advertisement -

கரோனா தொற்று காரணமாக இந்தியா வந்த தென்ஆப்பிரிக்க வீரர்கள் தற்போது தென் ஆப்பிரிக்கா திரும்பியுள்ளனர். மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இதனை வைத்து காமெடி செய்துள்ளார் டேல் ஸ்டெயின். வீரர்களை என்னையும் தனிமைப்படுத்தும் போது தென் ஆப்பிரிக்க கேப்டன் டி காக் உடன் சேர்த்து என்னை தனிமைப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் ஸ்டெய்ன்.

ஏனெனில் அவரருடன் இருந்தால் நல்ல சாப்பாடு கிடைக்கும் . அவர் ஒரு சமையல் கலை நிபுணர் எப்போதும் சமையல் கலை வீடியோக்களை பார்த்துக் கொண்டிருப்பார். மேலும் நான் மீன் பிடிக்கும் வீடியோக்களை நிறைய வைத்திருப்பேன். அதனை ரசித்து பார்த்துக் கொண்டிருப்பார். இதன் காரணமாக அவர்கள் இருந்தால் நல்ல சாப்பாடு கிடைக்கும்.

- Advertisement -

என்னைத் தனிமைப் படுத்தினால் அவருடன் நான் கண்டிப்பாக இருந்து விடுவேன் என்று கூறியுள்ளார் டேல் ஸ்டெயின். அதற்கு காரணம் டிகாக் தனது திறமையான சமயலின் மூலம் தனக்கு உணவு அளிப்பார் என்பதற்காக ஸ்டெயின் அவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Steyn-1

ஸ்டெயின் இந்த வருடம் ஐ.பி.எல் தொடருக்காக பெங்களூரு அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருட ஐ.பி.எல் தொடர் ரத்தாகவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement