கைல் ஜேமிசனின் இந்த அசத்தலான பந்துவீச்சிற்கு கோலியும் ஒருவகையில் காரணம் – டேல் ஸ்டெய்ன் ஓபன்டாக்

Steyn
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்கள் அடித்திருந்த இந்திய அணியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 71 ரன்களை மட்டுமே அடித்து எட்டு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமல்லாமல் முதல் இன்னிங்சில் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

Jamieson 2

- Advertisement -

நேற்றைய நாள் ஆட்டத்தின் போது தனியார் விளையாட்டு சேனல் ஒன்றிர்க்கு பேட்டியளித்திருக்கும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் கைல் ஜேமிசனின் இந்த அற்புதமான பர்ஃபாமன்சிற்கு ஐபிஎல் தொடரே காரணம் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் கூறியதாவது, கைல் ஜேமிசனின் பந்து வீச்சு மிக அற்புதமாக இருந்தது. அவருடைய இந்த சிறந்த பர்ஃபாமன்சிற்கு இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர்தான் காரணமாக இருக்கிறது.

ஐபிஎல்லில் அவர் சில போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருடன் நீண்ட நேரம் உரையாடியிருப்பார். அதுதான் அவருக்கு அதிகமான நம்பிக்கையை அளித்திருக்கிறது. மீண்டும் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி விளையாடவும் இருக்கிறார்.

jamieson

இனிவரும் அனைத்து போட்டிகளிலும் பெங்களூரு அணிக்காக கைல் ஜேமிசன் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது கைல் ஜேமிசனை பெரிய ஏலத்தொகையாக 15 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது பெங்களூர் அணி.

Jamieson

ஐபிஎல்லில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருந்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவர், அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement