நான் ஐ.பி.எல் தொடரில் விளையாட நோ சொன்னது இந்த காரணத்துக்காக தான் – டேல் ஸ்டெயின் வெளிப்படை

Steyn

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீரர் டேல் ஸ்டெய்ன் கடந்த ஐ.பி.எல் தாெடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வந்தார்.அந்த தொடரில் சரியான வகையில் ஆடாமல் அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த வருட ஐபில் தொடரில் நல்ல கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்டெய்ன் அதிரடியாக அறிவித்திருந்தார்.

Steyn-1

உலகில் நடைபெறும் மற்ற டி20 லீக் போட்டிகளில் விளையாட போவதாகும் இனி ஐபிஎல்லும் டாட்டா பைபை என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்விக்கு ஸ்டெய்ன் சமீபத்தில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணியிலும் எக்கச்சக்கமான பல நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள்.அதிக அளவில் பிரபலமான பல முன்னனி வெளிநாட்டு வீரர்களும் ஒவ்வொரு அணியிலும் உள்ளனர். அவர்கள் போட்டியின் மூலம் ஈட்டும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

அது தவிர ஏலத்தில் வீரர்கள் பெரிய பெரிய தொகைக்கு ஏலம் போகிறார்கள்.அங்கே பணத்துக்குத் தான் முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுவதாக நான் பார்க்கிறேன்.கிரிக்கெட்டுக்கு அதன் உரிய முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்படவில்லை.ஆனால் மற்ற டி20 லீக் அட்டங்களில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்படுகிறது.

Steyn

குறிப்பாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நான் பங்கெடுத்து ஆடி வரும் லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு போட்டிக்கு பிறகு நான் இப்படி ஆடினேன் எனது ஆட்டம் இப்படி இருந்தது என விளையாட்டை முன்னிலை படுத்தி மட்டும் பேசுவார்கள்.ஆனால் ஐபிஎல்லில் இவ்வளவு தொகை இவர் ஜெயிச்சார், இவர் இவ்வளவு தொகைக்கு விலைக்கு வாங்கப்பட்டார் என தொகைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Dale-Steyn

ஒழுங்கா ஆடாததால் யாரும் இவரை வாங்க மாட்டார்கள் என தெரிந்து விலகிவிட்டு ஐபிஎல்லை குத்தஞ்சொல்ல வந்து விட்டார் என இவரை நெட்டிசன்கள் டிவிட்டரில் வறுத்து வருகின்றனர்.