டேவிட் வார்னருக்கு ஐதராபாத் அணியில் இதுவே கடைசி சீசனாக இருக்கலாம் – ஸ்டெயின் கூறியதன் காரணம் தெரியுமா ?

Steyn
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் சீசன் தற்போது முதல் கட்டத்தை முடித்துவிட்டு இரண்டாவது கட்ட போட்டிகளுக்கு தயாரான நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இத்தொடரானது செப்டம்பர் மாதம் யு.ஏ.இ யில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இந்த தொடரில் டெல்லி அணி முதலிடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும், பெங்களூர் அணி 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடம் பிடித்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமான நிலையில் உள்ளது. தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக அணியில் புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வில்லியம்சன் கேப்டனாக மாற்றப்பட்டது மட்டுமன்றி வார்னர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

ஆனால் அவர் வெளியேற்றப்பட்ட அந்த போட்டியிலேயே சன்ரைசர்ஸ் அணி அவரை வெளியேற்றியதற்கான பலனை அனுபவித்தது. வார்னர் இல்லாதது அந்த பெரிய இழப்பை ஏற்படுத்தியது. வார்னரின் இந்த நீக்கம் காரணமாக அணிக்குகள் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. மேலும் வார்னரின் நீக்கம் சரியானது கிடையாது என ஐபிஎல் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் டேவிட் வார்னரின் இந்த நீக்கம் குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் கூறுகையில் :

Warner

சன் ரைசர்ஸ் அணி டேவிட் வார்னரை வெளியேற்றியதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வேலை கேப்டன் பொறுப்பை அவர்கள் மாற்ற விரும்பி இருந்தால் கூட அவரை பேட்ஸ்மேனாக அணியில் இணைத்து இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு சிறப்பான பேட்ஸ்மேனை எப்படி வெளியில் அமர வைத்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. மேலும் எனது டி20 அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு எப்போதும் இடம் கொடுப்பேன். இதனால் ஐதராபாத் அணிக்குள் மறைமுகமாக ஏதோ நடக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

warner 1

என்னை பொறுத்தவரை ஐதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு இதுவே கடைசி சீசனாக கூட இருக்கலாம் என்று பேசியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 10 அணிகளுடன் மிகப்பெரிய தொடரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அணிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஏலத்தில் நிச்சயம் சன் ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார் என நம்பலாம்.

Advertisement