தோனிக்கு ஏற்பட்ட அதே நிலைமை. பாவம் இவர் இனி அணியில் விளையாடறது கஷ்டம் தானாம் – ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான டேல் ஸ்டெயின் கடந்த பல வருடங்களாக தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணி மிக மோசமாக விளையாடியது.

rsa

- Advertisement -

இதனால் அந்த அணியின் மீது இருந்த எதிர்பார்ப்பு நீங்கி எதிர்மறையான விமர்சனங்கள் எழுத் துவங்கின. அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக இளம்வீரர் டிகாக் கேப்டன் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். பயிற்சியாளர் மாற்றப்பட்டு முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணியின் இயக்குனராக ஸ்மித் அறிவிக்கப்பட்டார்.

இதுபோன்ற பல அதிரடி மாற்றங்களை செய்து அதனை தொடர்ந்து தற்போது சில தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளது. அதேபோல உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் சிறந்த பேட்ஸ்மேன் ஆம்லா ஓய்வு பெற்றார். டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றார்.

Steyn

ஆனால் அதன்பின் தென்ஆப்பிரிக்க அணியில் அவர் தொடர்ச்சியாக விளையாடுவார் என்றும் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிந்தது. அதோடு அவர் 2020 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. அதனால் அணியில் தன்னை தேர்வு செய்வார்கள் என்று நம்பி இருந்த அவர் தொடர்ச்சியாக ஏமாற்றமே கண்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களின் ஊதிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதன் காரணமாக தற்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் தொடர்ச்சியாக விளையாடும் வீரர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வழங்கப்படும் அப்படி ஒப்பந்தம் இல்லாத வீரர் அணியில் இடம் பிடிப்பது கடினம் என்று அனைவருக்கும் தெரியும்.

steyn 1

எனவே ஸ்டெயின் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது சற்று கடினம் தான் என்று தெரிகிறது. இதே நிலைமை ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரரான தோனிக்கு ஏற்பட்டது. கடந்த மாதம் வெளியான இந்திய அணியின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூத்த வீரர் தோனியின் பெயரை நீக்கி வெளியிட்டது பிசிசிஐ. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதே நிலைமை ஸ்டெயின்க்கும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement