3 – 2ன்னு அவங்க தான் ஜெய்ப்பாங்க.. இந்தியா – இங்கிலாந்து தப்பிச்சு ஓட முடியாது.. ஸ்டைன் கணிப்பு

Dale Steyn
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் இளம் அணி இங்கிலாந்தில் களமிறங்க உள்ளதால் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கடந்த காலங்களில் சௌரவ் கங்குலி, தோனி தலைமையில் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை. கடைசியாக 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதன் பின் 18 வருடங்களாக அந்நாட்டில் ஒரு தொடரை வெல்வதற்கே இந்தியா திண்டாடி வருகிறது.

- Advertisement -

தப்பிக்க முடியாது:

இருப்பினும் இம்முறை இந்தியா சுமாரான ஃபார்மில் சீனியர் வீரர்களை நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. மேலும் சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

அவர்களுடன் 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த கருண் நாயர் ரவீந்திர ஜடேஜா, ரிசப் பண்ட், கேஎல் ராகுல் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக உலகின் நம்பர் ஒன் பவுலர் பும்ரா இருப்பதால் இம்முறை முழுமூச்சுடன் போராடும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த 5 போட்டிகளிலும் எந்த அணியும் தோல்வியிலிருந்து தப்பிக்க முடியாது என தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் கூறியுள்ளார்.

- Advertisement -

ஸ்டைன் கணிப்பு:

இறுதியில் தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து சொந்த மண்ணில் வெல்லும் என்று அவர் கணித்துள்ளார். இது பற்றி ஜியோஹாட்ஸ்டார் சேனலில் ஸ்டைன் பேசியது பின்வருமாறு. “அனைத்து போட்டிகளும் மிகவும் நெருக்கமாக இருக்கும். ஆனால் அனைத்து போட்டிகளிலும் முடிவு கிடைக்கும். ஒவ்வொரு போட்டியிலும் கண்டிப்பாக முடிவு இருக்கும்”

இதையும் படிங்க: 10க்கு 9.. தெ.ஆ கேப்டன் பவுமா 99 வருட உலக சாதனை.. தோனி, கோலி, பாண்டிங்கால் முடியல

“தோல்வியிலிருந்து எந்த அணியும் தப்பித்து ஓட முடியாது. அந்தத் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு முடிவுகள் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைத்து 5 போட்டிகளும் மிகவும் நெருக்கமாக இருக்கும்” எனக் கூறினார். ஒருவேளை இங்கிலாந்து மண்ணில் தற்போதைய இந்திய அணி 2 வெற்றிகள் பெற்றாலே அது பாராட்டுக்குரியதாக அமையும்.

Advertisement