இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த கடைசி போட்டியில் :
ஜஸ்ப்ரீத் பும்ராவை சீண்ட வேண்டாம் : டேல் ஸ்டெயின்
முதலில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக 201 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரரான குவிண்டன் டி காக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் அவரை ஜஸ்ப்ரீத் பும்ரா ஆட்டமிழக்க வைத்ததே போட்டிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனால் ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. அதோடு அந்த போட்டியில் முழுவதுமாக 4 ஓவர்களை வீசிய அவர் 17 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் பும்ராவின் அந்த சிறப்பான செயல்பாடு குறித்து பாராட்டினை தெரிவித்துள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற ஒரு பவுலரை கவனமாக எதிர்கொண்டு மற்ற பந்துவீச்சாளர்களை தான் அடித்து விளையாட வேண்டும். இல்லையெனில் அவர் போட்டியை முடித்துவிடுவார் என பும்ராவை பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஐந்தாவது டி20 போட்டியின் போது மிகச் சிறப்பாக விளையாடி வந்த குவிண்டன் டி காக்கை ஜஸ்ப்ரீத் பும்ரா விக்கெட் எடுத்ததுதான் போட்டிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று கூறுவேன். அவர் விக்கெட் எடுத்ததும் அடுத்தடுத்து பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பாக பந்துவீச விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன.
இதையும் படிங்க : எல்லாம் சரி தான்.. இந்த 2 பேரை ஏன் டி20 வேர்ல்டுகப் டீம்ல எடுக்கல – வாசிம் ஜாபர் கேள்வி
பும்ரா போன்ற பந்துவீச்சாளரை நாம் கவனமாக எதிர்கொண்டு மற்ற பந்துவீச்சாளர்களை தான் அடித்து விளையாட வேண்டும். பும்ராவை சீண்டி விட்டால் நிச்சயம் அவர் விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழி வகுத்து விடுவார் என டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.



