நான் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – டேல் ஸ்டெயின் தேர்வு

Steyn
- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்காக 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இதுவரை கிட்டத்தட்ட 93 டெஸ்ட் போட்டிகள், 125 ஒருநாள் போட்டிகள் மற்றும் 47 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக பங்கேற்றுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 699 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளிலும் 95ஆட்டங்களில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

steyn 1

- Advertisement -

இப்படி என்றுமே அழியா புகழ் உடன் இருக்கும் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் சமீபத்தில் தனது ஓய்வு முடிவினை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய அவர் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் திடீரென அவர் ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஓய்வு அறிக்கையில் : நான் அதிகம் விரும்பும் விளையாட்டில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தான் பந்துவீச கஷ்டப்பட்ட பேட்ஸ்மேன்கள் குறித்த கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Steyn 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : நல்ல பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசும் போது எனக்கு பெரிய அளவில் பிரச்சனை வந்ததில்லை. ஆனால் டெய்ல் எண்டர்களுக்கு அதாவது பின்வரிசையில் விளையாட வரும் பேட்ஸ்மேன்களை எண்ணித்தான் நான் கவலை பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் 17 வருட கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தனக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : சச்சின் மற்றும் பாண்டிங் ஆகியோருக்கு பந்துவீச்சாளர்கள் எந்த மாதிரி பந்துவீச போகிறார்கள் என்று முன்கூட்டியே கணிக்கும் திறன் இருப்பதால் அவர்கள் எப்போதுமே சிறப்பான பேட்ஸ்மேன்களாக திகழ்ந்தனர் என ஸ்டெயின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement