தோனி, கோலி, ரோஹித் என ஒருவர் கூட இல்ல. தனது பெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த – டேல் ஸ்டெயின்

Dale-Steyn
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தனக்கு பிடித்த தலைசிறந்த கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். ஊரடங்கு காரணமாக அனைத்து அணிகளின் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்கள் என அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளார். இதன் காரணமாக சமூகவலைத்தளம் மூலமாக கிரிக்கெட் பற்றி ஏதாவது ரசிகர்களுடன் வீரர்கள் பேசி வருகின்றனர்.

Steyn

அதேநேரத்தில் பல வீரர்களும், மீடியா நிறுவனங்களும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியை தேர்வு செய்து வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் மக்கள் மேத்யூ ஹைடன், ஹஸி, ஹர்பஜன் சிங் என பல வீரர்களும் தங்களுக்கு பிடித்த ஒரு சிறந்த அணியை தேர்வு செய்து வெளியிட்டனர். அதேபோல் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தன்னுடன் ஆடிய மற்றும் தனக்கு எதிராக ஆடிய வீரர்களை வைத்து ஒரு மிகச் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார் .

- Advertisement -

இந்த அணியில் ஆச்சரியமாக ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் தென்னாபிரிக்க அணியில் தற்போது இடம் வகிக்கும் டிவிலியர்ஸ், போன்ற பல ஜாம்பவான் வீரருக்கு கூட அவர் இடம் தரவில்லை. இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை துவக்க வீரராக தேர்வு செய்துள்ளார்.

Smith 1

அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், அந்த அணியின் மிகச்சிறந்த பீல்டராக இருந்த ஜான்டி ரோட்ஸ் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி படாத இரண்டு வீரர்களையும் அவர் அந்த அணியில் இணைத்துள்ளார்.

- Advertisement -

அதனை தாண்டி ஆஸ்திரேலியாவின் பால் ஹாரிஸ் தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் ஆச்சரியமாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங், தோனி, ரோஹித் சர்மா விராட் கோலி, கபில்தேவ் என ஒரு இந்திய வீரர்களை தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

lee 1

டேல் ஸ்டெயின் தேர்வு செய்த அந்த பெஸ்ட் 11 பேர் கொண்ட அணி இதோ : 1) குமார் சங்கக்கரா, 2) க்ரேம் ஸ்மித், 3) டேவ் ஹாக்கன், 4) ஜாக் காலிஸ், 5) ஜாண்டி ரோட்ஸ், 6) குயிண்டன் டி காக், 7) ப்ரெட் பார்கியாச்சி, 8) பீட்டர் லாம்போர்டு, 9) பிரெட் லீ, 10) பால் ஹாரிஸ், 11) ஆலன் டொனால்ட் ஆகியோரை ஸ்டெயின் தேர்வுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்பொழுதும் இந்திய அணியையும், இந்திய அணி வீரர்களை பற்றியும் பெருமையாக பேசும் ஸ்டெயின் சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், கோலி, தோனி, ரோஹித் என எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் தேர்வு செய்யாதது சற்று ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement