என்னுடைய பந்துவீச்சில் எனக்கு கஷ்டம் கொடுத்த பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – டேல் ஸ்டெயின் ஓபன் டாக்

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

steyn 1

- Advertisement -

இதனால் இந்திய வீரர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தற்போது தங்கள்து ஓய்வு நேரத்தை தங்களது வீட்டில் கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அதுமட்டுமின்றி தங்களது வாழ்வில் நடந்த சுவாரசிய நிகழவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

36 வயதான தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பல்வேறு தலைசிறந்த வீரர்களுக்கு பந்து வீசியுள்ளார். குறிப்பாக கடந்த 16 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் இவர் தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசி உள்ளார்.

அதிலும் குறிப்பாக பிரையன் லாரா, கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் என பல்வேறு தலை சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசி அனுபவமுள்ள இவரிடம் உங்களுக்கு கடும் போட்டி அளித்த பேட்ஸ்மேன்கள் யார் என்று ரசிகர்கள் டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த ஸ்டெயின் சந்தேகமின்றி நான் ஒரு சிலரை குறிப்பிட விரும்புகிறேன் என்று அவர்களது பெயரை பட்டியலிட்டார்.

- Advertisement -

அதில் இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பாண்டிங் மேலும் டிராவிட், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் மற்றும் இங்கிலாந்து அணியின் அதிர டிவீரரான கெவின் பீட்டர்சன் ஆகிய வீரர்கள் என்னுடைய பந்து வீச்சுக்கு எதிராக அசாத்தியமாக விளையாடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகள் விளையாடி வரும் அவர் இந்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில்இந்த டி20 உலகக்கோப்பை தொடரோடு அவர் டி20 போட்டிகளில் ஓய்வு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அவர் ஆர்சிபி அணிக்காக விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement