நேரலையில் ஆனந்தத்தில் அழுத டேல் ஸ்டைன்.. தெ.ஆ வெற்றி குறித்து தனது தொப்பியை காண்பித்து நெகிழ்ச்சி

Dale Steyn
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அதனால் 27 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்கா ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அத்துடன் உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாகவும் சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா தங்கள் மீதான கிண்டல்களுக்கு பதிலடிக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஏனெனில் காலம் காலமாக அந்த அணி செமி ஃபைனல், ஃபைனல் போன்ற அழுத்தமான போட்டிகளில் சொதப்பி வெற்றியை எதிரணிகளிடம் கோட்டை விட்டது. அதனால் வரலாற்றில் முதலும் கடைசியுமாக 1998 ஐசிசி நாக் அவுட் கோப்பையை தென்னாப்பிரிக்கா வென்றது. அதன் பின் 1999 உலகக் கோப்பை முதல் கடந்த 2024 டி20 உலகக்கோப்பை ஃபைனல் வரை ஐசிசி தொடர்களில் தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்தது.

- Advertisement -

தொடர் தோல்விகள்:

இத்தனைக்கும் ஆலன் டோனல்ட், ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டீ வில்லியர்ஸ், ஜேக் காலிஸ் உட்பட வரலாற்றின் மகத்தான ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் தென்னாப்பிரிக்காவால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. இதற்கிடையே 1992 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மழையும் வந்து தென்னாப்பிரிக்காவுடன் விளையாடி வெற்றியை பறித்துச் சென்றதை மறக்க முடியாது.

அதன் காரணமாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வந்த தென்னாப்பிரிக்கா சோக்கர் என்று பட்டத்துக்கு சொந்தமானது. அத்துடன் 2025 உலகக்கோப்பை செமி ஃபைனலில் தோல்வியுற்றதால் ஏபி டீ வில்லியர்ஸ், டேல் ஸ்டைன் அழுதது உட்பட தென்னாப்பிரிக்கா வலியை மட்டுமே சந்தித்து வந்தது. இருப்பினும் தற்போது தெம்பா பவுமா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்கா அந்த மோசமான வரலாற்றையும் மாற்றி எழுதி தங்களுடைய ரசிகர்களின் வலியை போக்கியுள்ளது.

- Advertisement -

ஸ்டைன் நெகிழ்ச்சி:

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் இந்த சரித்திர வெற்றியைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்ட போது டேல் ஸ்டைன் தம்முடைய தொப்பியைக் காட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது பற்றி அவர் நெகிழ்ச்சியுடன் பேச முடியாமல் உணர்ச்சி பொங்க பேசியது பின்வருமாறு. “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் என்ன சொல்வது?”

இதையும் படிங்க: இந்த வாய்ப்பை யூஸ் பண்ணி முகமது சிராஜ் பெருசா சாதிக்கனும்.. அதுதான் என் விருப்பம் – பரத் அருண் பேட்டி

“அது நம்ப முடியாதது. நான் இங்கே வீட்டில் என்னுடைய தென்னாபிரிக்க தொப்பியுடன் அமர்ந்திருக்கிறேன். இந்த வெற்றிக்காக மிகவும் பெருமையடைகிறேன். இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்? என்னுடையப் பையனை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வேன். வாழ்க்கை அப்படியே மகிழ்ச்சியாக செல்லும்” என்று கூறினார்.

Advertisement