மான்செஸ்டர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா போராடி ட்ரா செய்தது. அந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இந்திய வீரர்களின் சதத்தை தடுக்கும் வகையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக்கொள்ள வந்தது சர்ச்சையை உண்டாக்கியது. இருப்பினும் அவருடைய அழைப்பை இந்திய கேப்டன் கில் ஏற்கவில்லை.
அதனால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா மற்றும் சுந்தர் தங்களுடைய சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதைப் பார்த்த இங்கிலாந்தினர் இந்திய அணி கிரிக்கெட்டை நேர்மைத்தன்மையுடன் விளையாடாமல் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த தருணம் பற்றி தென்னாப்பிரிக்க வீரர் தப்ரீஸ் சம்சி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
ட்ரா தானே முக்கியம்:
“ஆட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ளும் வாய்ப்பை இந்தியர்கள் ஏற்காததைப் பற்றி ஏன் இவ்வளவு பெரிய பேச்சுக்கள் காணப்படுகின்றன? அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டது. அதை அவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் தங்களுடைய விருப்பத்தை செய்ய முழு உரிமையுடையவர்கள். அதன் படி அவர்கள் கடினமாக உழைத்த சதத்தை அடித்தனார். ஆட்டம் முடிந்தது” என்று பதிவிட்டார்.
அதைப் பார்க்க தென்னாபிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் இந்திய அணி ட்ராவுக்காக விளையாடியதாக அவருக்கு பதிலளித்தார். எனவே டிராவை சந்தித்ததும் போட்டியில் முடித்துக் கொள்வதை ஏற்காத இந்தியா ஜென்டில்மேனாக நடந்து கொள்ளவில்லை என்று ஸ்டைன் தெரிவித்துள்ளார். இது பற்றி சம்ஸிக்கு ட்விட்டரில் அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “ஷாமோ, இந்த வெங்காயத்தில் நிறைய தோல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரை அழ வைக்கும்”
ஸ்டைன் விமர்சனம்:
“ஒரே பிரச்சனை என்னவெனில் இந்திய பேட்ஸ்மேன்கள் ட்ராவுக்காக விளையாடினார்களே தவிர, சதத்துக்காக விளையாடவில்லை என்பதை மக்கள் உணராததை நான் பார்க்கிறேன். டிரா தான் முக்கியம். அதை நீங்கள் அடைந்ததும் எதிரணி போட்டியை முடிக்க சலுகை வழங்கினர். அது ஜென்டில்மேன் செயல் அல்லவா? இந்தியர்கள் அது பாதுகாப்பாக இருப்பதை உணர்வதற்கான நேரமில்லை”
இதையும் படிங்க: என்னோட ஆசை இதுதான்.. அணியில் இருந்து வெளியேறும் முன் வீரர்களிடையே பேசிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ
“அச்சமயத்தில் அவர்கள் சில இலவச சாதனைகளை விரும்புகிறோம் என்று சொன்னார்கள். அது விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும் வித்தியாசமாக தெரிகிறது. மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்த அவர்கள் கடைசி மணி நேரத்தில் சதத்தை அடிப்பதற்காக வேகமாக விளையாடியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாம் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டிருப்போம்” என்று கூறினார்.



