என்னோட ஆசை இதுதான்.. அணியில் இருந்து வெளியேறும் முன் வீரர்களிடையே பேசிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Rishabh Pant
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த ரிஷப் பண்ட் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

எனக்காக இதை செய்யுங்க.. இந்திய வீரர்களுக்கு : ரிஷப் பண்ட் வேண்டுகோள்

கடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் கால் பகுதியில் காயமடைந்த ரிஷப் பண்ட் வலியால் துடித்தார். அதனால் மைதானத்திற்குள் வந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி அளித்த போதிலும் விரல் பகுதியில் ஏற்பட்ட வீக்கத்தில் இருந்து ரத்தம் கசிந்ததால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

- Advertisement -

பின்னர் மைதானத்திலிருந்து வெளியேறிய அவர் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அப்படி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி இக்கட்டான சூழலில் இருக்கும் வேளையில் உடைந்த காலுடன் வந்து அரைசதம் அடித்து அனைவரையும் நெகிழ வைத்திருந்தார்.

அதன் பின்னர் அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் நாடு திரும்பும் முன்னதாக வீரர்களின் ஓய்வறையில் சில கருத்துக்களை முன்வைத்து பேசியிருந்தார்.

- Advertisement -

அப்படி ரிஷப் பண்ட் பேசியதாவது : இந்திய அணியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காயத்துடன் விளையாடி இருந்தேன். எப்போதும் சொந்த சாதனைகளை விட இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது மட்டுமே நமது இலக்காக இருந்தது. அதுதான் நமக்கு தேவையான ஒன்று. எனக்கு அனைவரது மத்தியில் இருந்த கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவின் 5 வருட உலக சாதனையை சமன் செய்த ஆஸி.. 8 – 0 என வெ.இ வரலாறு காணாத தோல்வி

அழுத்தமான சூழலில் இந்திய அணிக்காக நாம் களத்தில் நிற்கும்போது நம்முடைய நாடே நம் பின் நிற்கும். நான் இந்திய அணிக்கு தற்போது கொடுக்கும் மெசேஜ் ஒன்றுதான். அடுத்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்ய வேண்டும். எனக்காக அதை நீங்கள் செய்து காட்ட வேண்டும் என ரிஷப் பண்ட் வீரர்களிடையே நெகிழ்ச்சியான ஒரு கருத்தை பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement