RCB : இப்போதான் ஏதோ ஜெயிச்சோம்னு பாத்தா அதுக்குள்ளேவே. பெங்களூரு அணிக்கு அடுத்த சோதனை – விவரம் இதோ

பெங்களூரு அணி ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறப்போவதில்லை என்றாலும் கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் ஆறுதல் வெற்றி பெற்று சிறப்பாக ஆடிவருகிறது. தொடரின் ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்விகளை

Kohli-1
- Advertisement -

பெங்களூரு அணி ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறப்போவதில்லை என்றாலும் கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் ஆறுதல் வெற்றி பெற்று சிறப்பாக ஆடிவருகிறது. தொடரின் ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி இப்போதுதான் வெற்றிபாதைக்கு திரும்பியது. அதற்குள் பெங்களூரு அணிக்கு அடுத்த சோதனை வந்திருக்கிறது.

Steyn

- Advertisement -

பெங்களூரு அணிக்கு பந்துவீச்சில் ஆரம்பத்தில் இருந்து சரியான வீரர்கள் இல்லாமல் எதிரணியை கட்டுப்படுத்த திணறி வந்தது. ஏற்கனவே, பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் குல்ட்டர் நைல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெய்ன் அணியில் இணைந்தார்.

இவர் பெங்களூரு அணியில் இணைந்ததும் அந்த அணியின் பந்துவீச்சில் சற்று நம்பிக்கை ஏற்பட்டது. ஸ்டெய்ன் தனது அனுபவத்தையும், வேகத்தையும் வைத்து சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணிக்கு ஆறுதல் தந்தார். தற்போது கடைசியாக சென்னை அணியுடன் பங்கேற்ற போட்டியில் ஸ்டெய்ன் தோள்பட்டை பகுதியில் காயமடைந்தார்.

Dale styne

காயத்தின் தன்மை தற்போது அதிகரித்துள்ளதால் அவரும் இந்த தொடரில் இருந்து விலகி நாடு திரும்புகிறார். இது பெங்களூரு அணிக்கு பெரிய பின்னைடைவாக உள்ளது. மீதி இருக்கும் போட்டிகளில் பெங்களூரு அணி வென்றால் பிளேஆப் செல்லும் ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது என்ற சூழலில் ஸ்டெய்ன் இல்லாமல் பெங்களூரு அணி பந்துவீச்சில் கஷ்டப்படும் என்பதில் ஐயமில்லை.

Advertisement