38 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை தொட்டு ரசித்த கபில் தேவ்..! – காரணம் இதோ ?

kapil
- Advertisement -

1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்ததை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க இயலாது. அப்போதைய இந்திய அணியை தலைமை ஏற்று வழிநடத்தியவர் கபில் தேவ்.

kapildev

- Advertisement -

அப்போதைய காலகட்டத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்துவதென்பது அவ்வளவு எளிதான காரியம்அல்ல. அதற்கு முன்பு நடந்த இரண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியவர்களும் மேற்கிந்திய அணியினரே என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஆம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான மேற்கிந்திய அணியுடன் மோதியது. கபில்தேவின் அபார ஆட்டத்தால் மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று காலத்தால் அழியாத சாதனையை படைத்தது.

அதனை தொடர்ந்து, இந்திய அணி வென்ற உலக கோப்பையை, மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தலைமை ஏற்று வென்ற உலக கோப்பையை கபில் தேவ் அவர்கள், பி.சி.சி.ஐ அலுவலகம் சென்று தொட்டு பார்த்து ரசித்துள்ளார். அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது “1983 உலக கோப்பை, தானும் தனது சக வீரர்களும் இந்த உலகக்கோப்பையை எண்ணி பெருமை கொள்கிறோம், 1983 ஆம் ஆண்டிற்கு பின்னர் இதை நான் காண்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement