ஐ.பி.எல் தொடருக்கு வரும்போதே நாங்கள் இதை சொல்லிட்டுதான் வந்தோம். அதனால் பிரச்சனை இல்ல – கம்மின்ஸ் உறுதி

Cummins

இந்தியாவில் கொரனோ எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதன் காரணமாகவும், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும் பிசிசிஐ ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விளையாடும் வீரர்களின் பாதுகாப்பே முதல் கட்டமாக பார்க்கப்படும், அதன் அடிப்படையில் தற்போதைக்கு ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. மேலும் மறு அழைப்பு வரும் வரை அனைத்து வீரர்களும் அவர்களது குடும்பங்களுக்கு செல்லலாம்.

வெளிநாட்டு வீரர்களும் தங்களது ஊர்களுக்கு செல்லலாம் அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானம் மே 15ஆம் தேதி வரை அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார். இந்த விதிமுறை விளையாட்டு வீரர்களுக்கும் அடங்கும் எனவும் கூறிவிட்டார். இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் அல்லது வீரர்கள் மூலம் நாட்டிற்குள் கொரோனோ வந்து விட்டால் நிலைமை மோசமாகிவிடும், அதன் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

எனவே தற்போது இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு செல்ல அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், மே 15 வரை அவர்களது நாட்டிற்குச் செல்ல சிக்கல் எழுந்துள்ளது. எப்படி திரும்ப நாட்டிற்கு செல்வது என அனைவரும் ஒரு பக்கம் கவலையில் சூழ்ந்துள்ளனர்.

cummins 1

இது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நாங்கள் எங்கள் நாட்டில் இருந்து வருவதற்கு முன்னரே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்னர், 14 நாட்கள் குறைந்தபட்சம் நாங்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பிறகுதான் ஆஸ்திரேலியா நாட்டிற்கு வருவோம். முழு உடல் நலத்துடன் தான் திரும்பவும் நாட்டிற்கு வருவோம் என்றும் உத்தரவாதம் அளித்து இருந்தோம்.

- Advertisement -

Cummins

எனவே அதற்குள் விமானங்கள் குறித்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறேன். மேலும் ஜூன் முதல் மாதம் வரை ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிலையில், இன்னும் அதற்கு கால அவகாசம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் அனைத்தும் கூடிய சீக்கிரம் சுமூகமாக முடிந்து விடும் என்றும் இந்திய மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.

Advertisement