சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் – காரணம் என்ன?

IND
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கி மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க இருக்கும் இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணியை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் :

பொதுவாகவே ஐசிசி தொடரானது துவங்கும் போது அதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அந்த தொடருக்கு 35 நாட்களுக்கு முன்னதாக அதாவது 5 வாரங்களுக்கு முன்னதாக தங்களது 15 பேர் கொண்ட உத்தேச அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் அறிவிக்க வேண்டும். அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதன் பின்னர் அணிக்குள் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து கொள்ளலாம். அந்த வகையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை ஜனவரி 12-ஆம் தேதி நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ குறிப்பிட்ட காலத்திற்குள் வீரர்களின் பட்டியலை வெளியிட தயாராக இல்லை.

மேலும் தங்களது அணியை அறிவிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறப்போகும் பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பெறுவார்கள் என்பதனால் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான வீரர்களின் தேர்வு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : உலகின் முதல் வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் சுப்மன் கில் – விவரம் இதோ

எனவே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் தலைமையில் இன்று மீட்டிங் நடத்தப்படும் என்றும் அந்த மீட்டிங்கில் முடிவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நாளையோ, நாளை மறுதினமோ அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னரே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியும் அறிவிக்கப்படும் என்பதனால் இந்திய அணி அறிவிப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement