இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை எதிர்க்கவுள்ள சி.எஸ்.கே அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

- Advertisement -

60 போட்டிகளைக் கொண்ட 14வது ஐபிஎல் தொடர் தற்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய போட்டியின் முடிவில் இதுவரை மொத்தமாக பதினெட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 18 போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டெல்லி கேப்பிடல் அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 19ஆவது பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக நடக்க இருக்கிறது. அந்தப் போட்டி இன்று மதியம் வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் இந்த போட்டி காரசாரமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றது. 18 ரன்கள் வித்தியாசத்தில் இறுதியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

அந்த போட்டியில் ஆச்சரியப்படுத்தும் விதமாக சென்னை அணியின் சீனியர் வீரர் ட்வைன் பிராவோ விளையாட வைக்கப்படவில்லை. அவருக்கு மாற்று வீரராக லுங்கி இங்கிடி பங்கேற்றார். இன்றைக்கு நடக்க இருக்கும் போட்டியில் வழக்கம்போல சென்னை அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தாகூர் மற்றும் தீபக் சஹர் விளையாடுவார்கள். அவர்களுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இன்றும் லுங்கி இங்கிடி தான் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த போட்டியில் நன்றாக பந்துவீசி இதையடுத்து அவரை இன்றைய போட்டிகளில் விளையாட வைக்க சென்னை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிந்துள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணி எந்த வீரர்களை வைத்து விளையாடியது அதே வீரர்களை வைத்து தான் இந்த போட்டியில் விளையாட போகிறது. எனவே இன்றைய போட்டியில் டுவைன் பிராவோவுக்கு வாய்ப்பு கிடைக்க போவதில்லை.

- Advertisement -

csk vs rr

பெங்களூரு அணிக்கெதிரான சென்னை அணியின் உத்தேச பட்டியல் இதோ :

ருத்துராஜ் கெய்க்வா, டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, தோனி, ரவீந்திர ஜடேஜா, மொய்ன் அலி, சாம் கர்ரான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், லுங்கி நிகிடி

Advertisement