- Advertisement -
ஐ.பி.எல்

வரலாறு காணாத சறுக்கலை சந்திக்க காத்திருக்கும் சி.எஸ்.கே.. நேற்றைய தோல்வியின் மூலம் படைத்த – மோசமான சாதனை

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியில் விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது பத்தாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசமான சாதனை ஒன்றினை சமன் செய்துள்ள சி.எஸ்.கே மேலும் மிகப்பெரிய சரிவை சந்திக்க காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத சரிவை சந்திக்க காத்திருக்கும் சி.எஸ்.கே :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை அடித்தது.

- Advertisement -

பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது இந்த இலக்கினை மிகச் சிறப்பாக துரத்தி 17.1 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 188 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தற்போது ராஜஸ்தான் அணி தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை ஒன்பதாவது இடத்துடன் முடித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சி.எஸ்.கே அணியானது 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு மோசமான சாதனையை சமன் செய்துள்ளது.

- Advertisement -

அதாவது 2022-ஆம் ஆண்டு சென்னை அணி தாங்கள் விளையாடிய அந்த தொடரில் 10 தோல்விகளை பதிவு செய்திருந்தது. அதற்கடுத்து தற்போது நேற்றைய தோல்வியின் மூலம் 2025-ஆம் ஆண்டும் 10 தோல்விகளை பதிவு செய்து மோசமான சாதனையை சமன் செய்துள்ளது. அதோடு இன்னும் சென்னை அணிக்கு ஒரு லீக் போட்டி எஞ்சியுள்ள வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக எதிர்வரும் மே 25-ஆம் தேதி விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : தோனியின் வழியில் ஓய்வை அறிவிக்க காத்திருந்த ரோஹித்.. முட்டுக்கட்டை போட்ட பி.சி.சி.ஐ – வெளியான தகவல்

அந்த போட்டியிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தால் 11 தோல்விகளுடன் வரலாறு காணாத சரிவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இந்த தொடரில் தாங்கள் மோசமான நிலையில் இருந்தாலும் அடுத்த ஆண்டு பலமான கம்பேக் கொடுப்போம் என்று சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -