தோனியின் வழியில் ஓய்வை அறிவிக்க காத்திருந்த ரோஹித்.. முட்டுக்கட்டை போட்ட பி.சி.சி.ஐ – வெளியான தகவல்

Rohit and Dhoni
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இம்மாத ஆரம்பத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தார். தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா ஏற்கனவே டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய வேளையில் இன்னும் ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தோனியை போலவே ஓய்வை அறிவிக்க காத்திருந்த ரோஹித் :

ஆனால் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டியில் மட்டுமே இனி தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்துவிட்டார். இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்து ஒரு மாதத்தை நெருங்கியுள்ள வேளையில் தொடர்ந்து அவரது டெஸ்ட் ஓய்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் அனைவரது மத்தியிலும் இருந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய தகவலின் படி பிசிசிஐ தான் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை திடீரென அறிவிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் வெளியான தகவலில் : ரோகித் சர்மா தோனியை போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்த வேளையில் பிசிசிஐ செய்த சதியால் தான் அந்த முடிவை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

- Advertisement -

கடந்த 2014-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்த தொடரின் இடையே ஓய்வை அறிவித்துவிட்டு இந்திய டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறினார். அதேபோன்று தற்போது ரோகித் சர்மாவும் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த தொடரின் இடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார்.

இதையும் படிங்க : ஏனோ தானோன்னு எல்லாம் அடிக்கல.. அந்த பையன் ப்ராபரா ஆடுறான் – சி.எஸ்.கேவை வீழ்த்திய பின்னர் சாம்சன் பாராட்டு

ஆனால் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் ரோஹித் சர்மாவை கேப்டனாக தேர்வு செய்ய மாட்டோம் என்றும் முழுநேர பேட்ஸ்மேனாக அங்கு செல்லட்டும் என பிசிசிஐ முடிவு எடுத்ததாக தெரிகிறது. அதனால் ஒரு சாதாரண பேட்ஸ்மேனாக அங்கு செல்ல விரும்பாத ரோகித் சர்மா கேப்டனாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement