தொடரே நிறுத்தப்பட்டிருக்கும் வேளையில் சி.எஸ்.கே அணி முழுவதையும் தனிமைப்படுத்தியுள்ள நிர்வாகம் – காரணம் இதுதான்

CSK
- Advertisement -

கொல்கத்தா அணியை சேர்ந்த சந்தீப் வாரியார் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கொல்கத்தா அணியை சேர்ந்த அனைத்து வீரர்களும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை அணி நிர்வாகத்தில் தற்பொழுது 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த ஐ.பி.எல் தொடர் நிறுத்தப்பட்டிருக்கிறது.

Balaji

- Advertisement -

கடந்த மாதம் 21ம் தேதி சென்னை மற்றும் மும்பை அணி வீரர்கள் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்தனர். தற்பொழுது வரும் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னை அணியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி மற்றும் நிர்வாகத்தில் இருந்த மற்ற இரண்டு பேருக்கு உள்ளது தெரிய வந்தது.

இதன் காரணமாக சென்னை அணியில் உள்ள அனைவரும் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், தற்பொழுது சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் 6 நாட்களுக்கு தொடர்ந்து தனிமைப்படுத்த படுவார்கள். அவர்களுக்கு தினம்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனையில் மூன்று முறை தொடர்ச்சியாக நெகட்டிவ் என்ற முடிவு வரும் வரை அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருவார்கள்.

Balaji-3

எனவே இன்னும் ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் இவர்கள் அனைவரும் பழையபடி விளையாட முடியும். அதுவரையில் ஐபிஎல் சுகாதாரத்துறை இவர்களை சதா கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இனி நடக்க இருக்கும் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் மும்பை மாநகரில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மும்பையில் தற்பொழுது கொரோனா எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் வேளையில் அங்கே ஐபிஎல் போட்டிகளை பாதுகாப்பாக நடத்த முடியும் என்கிற அடிப்படையில் பிசிசிஐ அங்கு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் வீரர்களிடையே கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து இந்த தொடரானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement