இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை சி.எஸ்.கே அணி குறிவைக்கவுள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

CSK-1

இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. பல ஆண்டுகளாக கட்டி வைத்திருந்த ஒரு சாதனையையும் கோட்டை விட்டுவிட்டு வந்துவிட்டது. இத்தனை வருடமும் பிளே-ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற பெருமையை இழந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எப்படி பார்த்தாலும் அடுத்த வருடம் புதிய அணியைக் அமைக்கப்போகிறோம் என்று மகேந்திர சிங் தோனி கூறியிருந்தார்.

அதற்கு ஏற்ப அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு மிகப் பெரிய ஏலம் நடக்கப் போகிறது என்று சௌரவ் கங்குலி அறிவித்திருந்தார். அந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கீழே குறிப்பிடப்பட்ட வீரர்கள் எல்லாம் எடுத்தால் மிகச் சரியாக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

ஹனுமா விஹாரி :

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருக்கும் இவர் டி20 போட்டி களிலும் நன்றாக ஆடுவார். சுரேஷ் ரெய்னா அடுத்த வருடம் சென்னை அணிக்காக ஆடுவாரா இல்லையா ?என்று தெரியாத பட்சத்தில் இவரை சென்னை அணியில் எடுக்க கண்டிப்பாக அந்த அணி நிர்வாகம் முற்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

munro

காலின் மன்றோ :

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான இவர் ஐபிஎல் தொடரில் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரை மிக எளிதாக எடுத்து துவக்க வீரராக நியமிக்க முயற்சிக்கலாம் ஏனெனில் வெளிநாட்டு வீரர்களை வைத்து தான் கடந்த பல ஆண்டுகளாக துவக்க இடத்தை நிரப்பி வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Starc

மிட்செல் ஸ்டார்க் :

ஐபிஎல் தொடரில் முதல் ஸ்டாக் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை. இதன் காரணமாக இவரை எப்பாடுபட்டாவது அந்த அணி எடுக்கும் என்று தெரிகிறது.

adil-rashid

அடில் ரஷித் :

சுழற்பந்து வீச்சுக்கு இவரது பெயர் கட்டாயம் அடிபடும் அப்போது இவரையும் ஏலத்தில் எடுக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஏனெனில் இம்ரான் தாஹிர், பியூஸ் சாவ்லா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் சரியாக பந்து வீசுவதில்லை.

மார்ட்டின் கப்டில் :

இவரும் ஐபிஎல் தொடரில் பெரிதாக ஆடாத வீரர் சென்னை அணிக்கு ஒரு மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரர் தேவை ஒரு பக்கம் முன்றோ மறுபக்கம் மார்ட்டின் கப்டில் அந்த அணிக்காக ஆடினால் பழைய சென்னை அணி மீண்டு வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.