என்னய்யா இது பித்தலாட்டமா இருக்கு? வருஷா வருஷம் இதுவே வேலையா? – கொந்தளித்த சி.எஸ்.கே ரசிகர்கள்

CSK-Fans
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது கோட்டையான சேப்பாக்கத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே இருபெரும் பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதினால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டி துவங்க சில நாட்களே உள்ள வேளையில் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாக வழங்கப்படாது என்றும் ஆன்லைன் மூலமாகவே ரசிகர்கள் வாங்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்தில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் அதிக தொகைக்கு விற்கப்பட்டது.

அதன்காரணமாக இந்த முறை நேரில் டிக்கெட் விற்பனை கிடையாது என்றும் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த முதல் போட்டிக்கான டிக்கெட் இன்று மார்ச் 18-ஆம் தேதி காலை 9:30 மணி முதல் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

அதனால் ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டை எடுக்க முயற்சிக்கவே வலைதளம் முடங்கியது. இருப்பினும் சில நிமிடங்களுக்கு பின்னர் வெளியான அறிக்கையின்படி : டிக்கெட் விற்பனை ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே முடிந்து விட்டதாகவும், 38,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில் 18,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும் காண்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ரசிகர்களுக்கு அந்த உரிமை இருக்கு.. ரோஹித் கேப்டனா இல்லனாலும் பிரச்சனை இல்ல.. பாண்டியா பேட்டி

இதனால் அதிருப்தி அடைந்த சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் : ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று தான் பிசிசிஐ மாயாஜால வேலைகளை செய்கிறதோ என்று தோன்றுகிறது. ஏனெனில் டிக்கெட் விற்பனையான ஆரம்பித்த சில நொடிகளிலேயே விற்பனை முடிந்து விட்டால் நாங்கள் எவ்வாறு டிக்கெட்டுகளை பெற முடியும். மேலும் குறைந்த அளவில் டிக்கெட்டுகளை விற்றுவிட்டு மற்ற டிக்கெட்டுகளை என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடப்பட்டது.

Advertisement