ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை – மும்பை மோதல். தேதி, நேரம், மைதானம் அறிவிப்பு – விவரம் இதோ

CskvsMi
- Advertisement -

2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன . இந்த போட்டி மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும். சென்ற வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடைசியாக மும்பை அணி சென்னையை போராடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Ipl cup

- Advertisement -

முன்னதாக கடந்த 7 ஆண்டுகளாக மும்பை அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எப்படி சமாளித்து வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் .

இதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு புதிய மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேலரிகள் J,I&k ஆகியவை ரசிகர்களுக்காக திறந்து விடப்படுகின்றன. இதனால் சேப்பாக்கம் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழியப் போகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள் விவரம்:

- Advertisement -

மார்ச் 29 – மும்பை இந்தியன்ஸ் – இடம்: மும்பை

ஏப்ரல் 2 – ராஜஸ்தான் ராயல்ஸ் – இடம்: சென்னை

- Advertisement -

ஏப்ரல் 6 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இடம்: கொல்கத்தா

ஏப்ரல் 11 – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இடம்: சென்னை

- Advertisement -

ஏப்ரல் 13 – டெல்லி கேபிடல்ஸ் – இடம்: டெல்லி

ஏப்ரல் 17 – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இடம்: மொகாலி

ஏப்ரல் 19 – சன்ரைசர்ஸ் ஐதராபாத் – இடம்: சென்னை

ஏப்ரல் 24 – மும்பை இந்தியன்ஸ் – இடம்: சென்னை

ஏப்ரல் 27 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – இடம்: சென்னை

ஏப்ரல் 30 – சன்ரைசர்ஸ் ஐதராபாத் – இடம்: ஐதராபாத்

மே 4 – ராஜஸ்தான் ராயல்ஸ் – இடம்: ஜெய்பூர்

மே 7 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இடம்: சென்னை

மே 10 – டெல்லி கேபிடல்ஸ் – இடம்: சென்னை

மே 14 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – இடம்: பெங்களூர்

Advertisement