CSK vs GT : இன்றாவது ஃபைனல் நடக்க மழை வழிவிடுமா? ஒவ்வொரு மணிநேர முழுமையான வெதர் ரிப்போர்ட் இதோ

CSK-vs-GT-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் அணிகள் மோதும் மாபெரும் இறுதிப் போட்டி மே 28ஆம் தேதியான நேற்று அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் காலம் காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் தோனி தலைமையிலான சென்னையும் கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டு மிரட்டலாக செயல்பட்டு வரும் பாண்டியா தலைமையிலான குஜராத்தும் மோதுவதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது.

இருப்பினும் மாலை 6:00 மணி அளவிலிருந்தே அகமதாபாத் நகரில் மழை பெய்ய துவங்கியதால் அந்த போட்டி வழக்கமான 7.30 மணிக்கு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் ஃபைனல் என்பதால் இரவு 9 மணி வரை எந்த ஓவரையும் குறைக்காமல் போட்டியை நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனாலும் தொடர்ந்து வெளுத்து வாங்கிய மழை 10 மணியளவில் ஆலங்கட்டி மழையாக மாறி இடி மின்னலுடன் பெய்து கடைசி வரை போட்டியை மொத்தமாக நிறுத்தியது. நல்ல வேளையாக ஃபைனல் என்பதால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த சீசனில் தான் ரிசர்வ் நாளை ஐபிஎல் நிர்வாகம் ஒதுக்கியிருந்தது.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
அதனால் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதி போட்டி ரிசர்வ் நாளில் இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடைபெற உள்ளது. ஆனால் அதிலாவது போட்டி நடைபெறுமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வரும் நிலையில் அகமதாபாத் நகரின் இன்றைய வெதர் ரிப்போர்ட் பற்றி பார்ப்போம். தற்போது இந்தியாவில் கோடை காலம் என்பதால் வெப்ப சலனம் காரணமாக நேற்று திடீரென்று அகமதாபாத் நகரில் ஆலங்கட்டி மழை பெய்தது. அந்த வரிசையில் தற்போது அகமதாபாத் நகரில் 32 டிகிரி வெப்பத்துடன் சூரிய வெளிச்சம் தெளிவாகவே இருக்கிறது.

அந்த வகையில் 2 மணி வரை முறையே 33, 35, 36 டிகிரி வெப்பம் காணப்படும் என்று தெரிவிக்கும் இந்திய வானிலை மையம் மதியம் 3 மணியளவில் 10% மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறுகிறது. அது அப்படியே அதிகரித்து 4 மணியளவில் 47%, 5 மணியளவில் 51%, 6 மணியளவில் 47% இடியுடன் கூடிய மழையாக பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையத்தின் அறிக்கை கூறுகிறது. இருப்பினும் ரசிகர்களின் கோரிக்கைக்கு போலவே 7 மணி முதல் படிப்படியாக குறையும் மழையின் அளவு போட்டி துவங்கும் 7.30 மணிக்கு 0 சதவிதமாக முற்றிலும் குறைந்து மேகமூட்டத்துடன் கூடிய வானிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதை தொடர்ந்து இரவு 11 மணி முதல் 12 மணி வரை கிட்டத்தட்ட அதே மாதிரியான வானிலை தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அந்த சமயங்களில் இடையிடையே லேசான தூரல் மழை வந்து போவதற்கு வாய்ப்புள்ளது. அதன் காரணமாக நேற்று போல மொத்தமாக மீண்டும் இன்று நடைபெறும் ஃபைனல் தடைபடாது என்று உறுதியாக நம்பலாம். அதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இந்த போட்டியின் முடிவும் வெற்றியாளர் யார் என்பதும் தெரியும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். குறிப்பாக நேற்று போலவே இரவு 9 மணி வரை மழை பெய்தாலும் ஓவர்களை குறைக்காமல் போட்டியை நடத்த நடுவர்கள் முயற்சிப்பார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : கவாஸ்கர் சார் சொல்லியும் கேட்காம சஞ்சு சாம்சன் அப்டி செஞ்சதை ஜீரணிக்க முடியல – ஸ்ரீசாந்த் அதிருப்தி

அதன் உச்சகட்டமாக இரவு 12.05 மணிக்கு மழை நின்றால் கூட குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்க முயற்சிப்பார்கள். அதையும் தாண்டி 1 ஓவர் கொண்ட போட்டியாக நடத்த நடுவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி மீண்டும் மழை பெய்தால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத்துக்கு கோப்பை பரிசளிக்கப்படும். இருப்பினும் இன்றைய வானிலை நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதால் போட்டி நடைபெறும் என்று 99% நம்பலாம்.

Advertisement